Skip to main content

டிக்கெட் இருந்தும் உள்ளே விட மறுப்பு; திரையரங்கில் தீண்டாமை - ஜி.வி. பிரகாஷ் கண்டனம்

Published on 30/03/2023 | Edited on 30/03/2023

 

pathu thala movie Untouchability in theater  GV Prakash condemned

 

கிருஷ்ணா இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள 'பத்து தல' திரைப்படம் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்று (30.03.2023) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. படத்தைக் காண சிம்பு ரசிகர்கள் உள்ளிட்ட சினிமா ரசிகர்கள் பலரும் திரையரங்குகளில் கூடியுள்ளனர்.

 

அந்த வகையில், சென்னையில் உள்ள பிரபல திரையரங்கம் ஒன்றில் பெண்கள் சிலர் அவர்களது குழந்தைகள் மற்றும் குடும்பத்துடன் படம் பார்க்க டிக்கெட் எடுத்துள்ளனர். அவர்கள் சாலையோரம் பாசி மணி விற்பவர்கள் என்பதை அறிந்த திரையரங்க ஊழியர், அவர்களை உள்ளே அனுமதிக்க மறுத்துள்ளார். இதனால் அங்கே இருந்த ரசிகர்கள் அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலானது. பலரும் தீண்டாமை கடைப்பிடித்துள்ளதாகக் கண்டங்கள் எழுப்பி வந்தனர். 

 

இந்த நிலையில் இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார், இந்த வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து, "அந்த சகோதரியும் சகோதரர்களும் பின் தாமதமாக அனுமதிக்கப்பட்டதாக விவரம் தெரிகிறது. எனினும் முதலில் அனுமதிக்க மறுத்ததை எவ்விதத்திலும் ஏற்றுக்கொள்ள இயலாது. கலைகள்  அனைவருக்கும் சொந்தமானது" எனப் பதிவிட்டுள்ளார்.  

 

 

 

சார்ந்த செய்திகள்