Parthipan pleads At least watch Indian 2 twice and watch his film

இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் இந்தியன் 2. இப்படம், இந்தியன் 3 அதாவது மூன்றாம் பாகமாகவும் வெளியாகவுள்ளது. லைகா நிறுவனம் தயாரித்திருக்கும் இப்படத்தில் காஜல் அகர்வால், விவேக், சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், எஸ்.ஜே.சூர்யா, பாபி சிம்ஹா, பிரியா பவானி சங்கர், பிரம்மானந்தம், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்திருக்கும் இந்தியன் 2 படம் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாகவுள்ளது. கடந்த 1996ஆம் ஆண்டில் வெளியான இந்தியன் படத்தின் இரண்டாம் பாகமான இந்தியன் 2 படம், 28 ஆண்டுகளுக்குப் பிறகு வருகிற ஜூலை 12ஆம் தேதி திரைக்கு வரவிருக்கிறது.

Advertisment

அதே வேளையில், இயக்குநரும், நடிகருமான பார்த்திபன் இரவின் நிழல் படத்தை தொடர்ந்து, ‘டீன்ஸ்’ படத்தை இயக்கியும் தயாரித்தும் உள்ளார். ஹாரர் திரில்லர் ஜானரில் குழந்தைகளை மையமாக வைத்து இப்படம், இந்தியன் 2 வெளியாகும் அதே தேதியான ஜூலை 12ஆம் தேதி வெளியாகயிருக்கிறது. பார்த்திபன் இயக்கியிருந்த இப்படத்தில் டி.இமான் இசையமைத்திருக்கிறார்.

Advertisment

இந்த நிலையில், இந்தியன் 2 படத்தை இரண்டு முறை பார்த்துவிட்டாவது தன் படத்தை பாருங்கள் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து பார்த்திபன் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “நண்பர்களே! இத்திரையுலகில் எல்லோருக்கும் நான் நண்பன் ஆனால், எனக்கு நீங்களே! இந்திய அளவிலான ஒரு பிரமாண்ட படத்துடன் நம் டீன்ஸ்! 12/07/2024 அன்று முதல்…

முதல் காட்சியிலேயே குடும்பம்/குழந்தைகளுடன் பாருங்கள், சிறப்பாய் இருந்தால் ஊருக்குச் சொல்லுங்கள் சொல்வீர்கள் என்ற நம்பிக்கையுடனே களத்தில் நிற்கிறேன்.நீங்கள் என் மீது வைக்கும் நம்பிக்கையை ரிசர்வேஷன் தொடங்கிய உடனேயேக் காட்டுங்கள். நானே கமல் சாரின் தீவிர ரசிகன்தான். INDIAN-2-வை (இந்தியன் 2) இருமுறை பார்த்து விட்டாவது நம் TEENZ-ஐ (டீன்ஸ்) கண்டு கொள்ளுங்கள். TEENZ (டீன்ஸ்) அனைவரும் INDIAN-ஐ (இந்தியன்) பார்த்து பாராட்டி மகிழ வேண்டும். அதே போல INDIANs (இந்தியர்கள்) அனைவரும் TEENZ-ஐ (டீன்ஸ்)…! உளப்பூர்வமான இவ்வேண்டுகோளை மீறிய விளம்பரம் நானென்ன செய்திட முடியும்? இச்செய்தியை உங்கள் நண்பர்களுக்கு முதலில் ஷேர் செய்யுங்கள் Please!(ப்ளீஸ்)” எனப் பதிவிட்டுள்ளார்.

Advertisment