Skip to main content

“‘நானே வருவேன்’னு சொல்லித்தான் வந்தேன், ஏன்னா.." - வார்த்தையால் விளையாடிய பார்த்திபன் 

Published on 29/09/2022 | Edited on 29/09/2022

 

parthiban talk about ponniyin selvan movie

 

மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம் உள்ளிட்ட பல்வேறு முன்னணி பிரபலங்கள் நடித்துள்ள பொன்னியின் செல்வன் படம் வருகிற 30(நாளை) ஆம் தேதி திரையரங்குகளில் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது.  இதனையொட்டி தீவிரமாக ப்ரோமோஷன் பணிகளில் படக்குழு முழு வீச்சில் ஈடுபட்டு வந்தது. சென்னை, பெங்களூரு டெல்லி ஹைதராபாத் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளை நடத்தி முடித்துவிட்டுப் மீண்டும் சென்னை திரும்பிய படக்குழு இன்று மீண்டும் பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தியது.

 

அதில் பேசிய பார்த்திபன், "நானே வருவேன் என்று சொல்லி அடம்பிடித்தான் இன்றைக்கு இங்கே வந்திருக்கிறேன். என்னை இந்த பத்திரிகையாளர் சந்திப்புக்கு அழைத்த போது முதலில் நான் வரவில்லை, தஞ்சாவூர் போறேன், அங்கு படத்தை பார்த்துவிட்டு, பிறகு ராஜராஜ சோழனுக்கு மரியாதையை செலுத்த உள்ளேன். அதனால் என்னால் வர முடியாதுன்னு சொன்னேன். ஆனால் இந்த மேடையை  தவற விட்டுவிட கூடாது என்பதற்காக அடம்பிடித்து நானே வருவேன்னு சொல்லிட்டு வந்திருக்கேன்.ஏன்னா இந்த மாதிரியான பிரம்மாண்ட மேடை இன்னும் எத்தனை படத்திற்கு பார்க்க போறேன்னு தெரியல. நம்ம காதலியை இன்னொருத்தன் கல்யாணம் பண்ணி கூட்டிட்டு போனா எப்படி இருக்குமோ அப்படி இருக்கு. அந்த மாதிரி இவ்வளவு நாளா நாம காதலித்த படம் நாளைக்கு ரசிகர்கள் கிட்ட போகும் போது, சந்தோஷமாக இருந்தாலும், ஒரு பக்கம் வருத்தமாக இருக்கு" என்று தானே உரித்தான வார்த்தை விளையாட்டில் பேசி பலரையும் சிரிப்பலையில் ஆழ்த்தினார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

இரட்டை வேடத்தில் சிம்பு - வெளியான லேட்டஸ்ட் தகவல்

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
simbu to act double getup in kamal maniratnam thug life

கமல்ஹாசன் தற்போது ஷங்கர் இயக்கும் 'இந்தியன் 2' மற்றும் இந்தியன் 3 படத்தை கைவசம் வைத்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு மொத்தமும் முடிந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்தியன் 2 படத்தின் போஸ்ட் புரொடைக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருவதாக சொல்லப்படுகிறது. இப்படத்தை முடித்துவிட்டு அ.வினோத் இயக்கத்தில் ஒரு படம் நடிக்க கமிட்டானார். ஆனால் அது தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது. 

இந்தச் சூழலில் மணிரத்னத்துடன் அவர் கைகோர்த்துள்ள ‘தக் லைஃப்’ பட பூஜை கடந்த அக்டோபர் மாதம் போடப்பட்டது. ராஜ்கமல் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இப்படத்தை கமல்ஹாசனும், ரெட் ஜெயண்ட் நிறுவனம் இணைந்து வழங்க ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். இப்படத்தின் டைட்டில் அறிவிப்பு வீடியோ, கமல் பிறந்தநாளை முன்னிட்டு வெளியான நிலையில், ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியது. 

இப்படத்தில் ஜெயம் ரவி, துல்கர் சல்மான், த்ரிஷா, கௌதம் கார்த்திக், மலையாள நடிகர் ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லக்‌ஷ்மி, விருமாண்டி புகழ் அபிராமி, நாசர் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஜனவரி மாத இறுதியில் தொடங்கியது. சென்னையில் நடந்ததாக கூறப்பட்ட நிலையில், அடுத்த கட்ட படப்பிடிப்பு செர்பியாவில் நடத்த திட்டமிட்டிருந்ததாக சொல்லப்பட்டது. மேலும் அங்கு பணிகள் நடந்ததாக கூறப்படும் நிலையில், கமல் வருகை தரவில்லையாம். அவர் நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில் பிரச்சாரம் மேற்கொள்வதால் தேர்தல் முடிந்த பின்புதான் படப்பிடிப்பில் கலந்து கொள்வதாக கூறப்பட்டு வருகிறது. இதனால் மணிரத்னம் உள்ளிட்ட படக்குழு தற்போது சென்னையில் இருப்பதாக திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

இதனிடையே தக் லைஃப் படத்திலிருந்து துல்கர் சல்மான் மற்றும் ஜெயம் ரவி கால்ஷீட் பிரச்சனை காரணமாக விலகியுள்ளதாக தகவல் வெளியானது. பின்பு துல்கர் சல்மானுக்கு பதில் சிம்புவும், ஜெயம் ரவிக்கு பதில் அரவிந்த் சாமியும் நடிக்கவுள்ளதாக கூறப்பட்டது. இந்த நிலையில் படத்தின் லேட்டஸ்ட் தகவலின்படி, துல்கர் சல்மான் மற்றும் ஜெயம் ரவி இருவரும் மீண்டும் இப்படத்தில் இணைந்துள்ளதாகவும் சிம்பு வேறொரு புதிய கதாபாத்திரத்தில் இரட்டை வேடத்தில் நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. தொடர்ந்து இப்படத்தின் நடிகர்கள் விலகவும் இணையவுமாக தகவல் வெளியாகி வரும் நிலையில் விரைவில் தெளிவான அறிவிப்பை படக்குழு வெளியிடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. சில மாதங்களுக்கு முன்பு, கமல் இப்படத்தில் மூன்று வேடங்களில் நடிப்பதாக தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.   

Next Story

புதிய உலக சாதனை படைத்த பார்த்திபனின் 'டீன்ஸ்' 

Published on 08/04/2024 | Edited on 08/04/2024
Parthipans Teenz breaks new world record

இயக்குநரும், நடிகருமான பார்த்திபன் இரவின் நிழல் படத்தை தொடர்ந்து, '52 ஆம் பக்கத்தில் ஒரு மயிலிறகு' என்ற தலைப்பில் ஒரு படத்தை உருவாக்கி வருகிறார். மேலும், இரண்டு படங்களை உருவாக்கவுள்ளதாகவும் தெரிவித்திருந்தார். இப்போது அதன் பணிகளில் பிசியாக இருக்கிறார். இந்த நிலையில் டீன்ஸ் என்ற தலைப்பில் ஒரு படத்தை உருவாக்கியுள்ளார். பயோஸ்கோப் ட்ரீம்ஸ், அகிரா புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு இமான் இசையமைத்துள்ளார். ஹாரர் திரில்லர் ஜானரில் குழந்தைகளை மையமாக வைத்து இப்படம் உருவாகும் நிலையில் படத்தின் டீசர் கடந்த மாதம் வெளியானது. 

இப்படத்தின் முதல் பார்வை திரையரங்குகளில் தணிக்கை சான்றிதழ் உடன் வெளியிடப்பட்டது. இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் அண்மையில் வெளியிடப்பட்டது. டிரெய்லரை இயக்குநர் மணிரத்னம் வெளியிட்ட நிலையில், 'டீன்ஸ்' திரைப்படத்தின் இசை சென்னையில் உள்ள பிரபல திரையரங்கில் நான்கு காட்சிகளாக தொடர்ந்து வெளியிடப்பட்டு புதிய உலக சாதனையை படைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதைத் தொடர்ந்து, ஒரே நாளில் ஒரே இடத்தில் அதிக இசை வெளியீட்டு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்ட படம் என்பதற்கான சான்றிதழ் 'டீன்ஸ்' திரைப்படத்திற்கு உலக சாதனைகள் சங்கத்தால் வழங்கப்பட்டது. பதிமூன்று குழந்தைகளை மையமாகக் கொண்ட கதை என்பதால் பல்வேறு துறைகளில் சாதனை புரிந்த 13 இளம் வயதினருக்கு நிகழ்ச்சியில் 'டீன்ஸ்' படக்குழு நேரில் பாராட்டு தெரிவித்தது.