parthiban new year celebration in pondicherry central jail

இயக்குநரும் நடிகருமான பார்த்திபன் இரவின் நிழல் படத்தை தொடர்ந்து, '52 ஆம் பக்கத்தில் ஒரு மயிலிறகு' என்ற தலைப்பில் ஒரு படத்தை உருவாக்கி வருகிறார். மேலும் இரண்டு படங்களை உருவாக்கவுள்ளதாகவும் தெரிவித்திருந்தார். இப்போது அதன் பணிகளில் பிசியாக இருக்கிறார்.

Advertisment

இந்த நிலையில் பாண்டிச்சேரி மத்திய சிறைச்சாலையில் புத்தாண்டை முன்னிட்டு அவர் நடத்தி வரும் பார்த்திபன் மனித நேய மன்றம் மூலமாக, பாடகர் ஸ்ரீ ராமை அழைத்து கொண்டு ஒரு இசைக்கச்சேரி நடத்தியுள்ளார். சிறைச்சாலையில் இருப்பவர்கள், புத்தாண்டை மிகசிறப்பாக, இதுவரை அவர்கள் பார்க்காத ஒரு இன்னிசையுடன் ஆரம்பிக்க நினைத்து இதனை ஏற்பாடு செய்துள்ளதாக அவரது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இது தொடர்பான வீடியோ ஒன்றையும் இணைத்துள்ளார்.

Advertisment

கடந்த ஆண்டு சென்னையில் நடந்த புத்தகக் கண்காட்சியில், சிறைத்துறை மற்றும் சீர்திருத்த துறை சார்பாக ஒரு அரங்கு வைக்கப்பட்டது. இதில் சிறைக் கைதிகளுக்கு பயன்படும் வகையில் தானமாக புத்தகம் பொதுமக்கள் கொடுத்தால் அதை கைதிகளுக்கு கொண்டு சேர்க்கும் வகையில் அமைக்கப்பட்டிருந்தது. பார்த்திபன் ஒவ்வொரு அரங்காக சென்று சிறைவாசிகளுக்காக புத்தகம் வேண்டி மடிப்பிச்சை கேட்டு, சேகரித்த புத்தகங்களை அந்த அரங்கில் சேர்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisment