Skip to main content

“வாக்களிக்காதவர்களுக்கு வரி அதிகரிக்க வேண்டும்” - பிரபல நடிகர் யோசனை

Published on 20/05/2024 | Edited on 20/05/2024
Paresh Rawal said increase in tax for those who don't vote

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலின் வாக்கு பதிவு, மொத்தம் ஏழு கட்டங்களாக நடைபெறும் நிலையில், ஒவ்வொரு கட்டங்களாக நடந்து வருகிறது. இதுவரை நான்கு கட்ட வாக்குபதிவுகள் நடைபெற்று முடிந்துள்ளது. முதற்கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி அன்று தமிழ்நாடு, மணிப்பூர், உள்ளிட்ட 102 தொகுதிகளுக்கும், இரண்டாம் கட்டமாக ஏப்ரல் 26ஆம் தேதி கேரளா, கர்நாடகா உள்ளிட்ட 89 தொகுதிகளுக்கும் மூன்றாம் கட்ட வாக்குப் பதிவு மே 7ஆம் தேதி குஜராத், மராட்டிம், கோவா உள்ளிட்ட 94 தொகுதிகளுக்கும் நான்காம் கட்ட வாக்குபதிவு மே 13ஆம் தேதி தெலுங்கானா, ஆந்திரா உள்ளிட்ட 96 தொகுதிகளுக்கும் நடைபெற்றது.

இதையடுத்து இன்று ஐந்தாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அதன்படி உத்தரப் பிரதேசத்தில் 14 தொகுதிகளுக்கும், மகாராஷ்டிராவில் 13 தொகுதிகளுக்கும், மேற்கு வங்கத்தில் 7 தொகுதிகளுக்கும், பீகாரில் 5 தொகுதிகளுக்கும், ஒடிசாவில் 5 தொகுதிகளுக்கும், ஜார்க்கண்டில் 3 தொகுதிகளுக்கும், ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் ஒரு தொகுதிகளுக்கும், லடாக் யூனியன் பிரதேசத்தில் ஒரு தொகுதிகளுக்கும் என 6 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் உள்ள 49 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

Paresh Rawal said increase in tax for those who don't vote

வாக்குச் சாவடிகளில் பொதுமக்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், பிரபலங்கள் எனப் பலரும் காலை முதல் ஆர்வத்துடன் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். திரை பிரபலங்கள் அக்‌ஷய் குமார், அமீர் கான், ஹேமா மாலினி, சுனில் ஷெட்டி, வருண் தவான், ஃபர்ஹான் அக்தர், சோயா அக்தர், பரேஷ் ராவல், சுதர்மேந்திரா எனப் பலரும் வாக்களித்தனர். அந்த வகையில் நடிகர் பரேஷ் ராவல், மும்பையில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில் வாக்களித்தார். பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அவர், “அரசாங்கம் இதைச் செய்யவில்லை. அதைச் செய்யவில்லை எனச் சொல்பவர்கள், இன்று வாக்களிக்கவில்லை என்றால், அதற்கு நீங்கள்தான் பொறுப்பு, அரசாங்கம் அல்ல. அப்படி வாக்களிக்கத் தவறியவர்களுக்கு வரி அதிகரிப்பு அல்லது வேறு சில தண்டனைகள் கொடுக்கப்பட வேண்டும்” எனக் கூறினார். இவர் பாலிவுட்டில் பல்வேறு படங்களில் நடித்துள்ளார். தமிழில் சூர்யாவின் சூரரைப் போற்று படத்தில் வில்லனாக நடித்திருந்தார். நடிப்பதைத் தாண்டி அரசியலிலும் ஈடுபட்டு வருகிறார். 2014ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் பா.ஜ.க. சார்பில் அகமதாபாத் கிழக்கு தொகுதியில் போட்டியிட்டு வெற்றியும் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

சார்ந்த செய்திகள்

Next Story

மக்களவைத் தேர்தல் தோல்வி; எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை!

Published on 10/07/2024 | Edited on 10/07/2024
Lok Sabha election failure Edappadi Palaniswami advice

ஏழு கட்டங்களாக நடைபெற்ற மக்களவைத் தேர்தல் முடிவுகள் கடந்த ஜூன் 4ஆம் தேதி வெளியானது. அதில் 543 மக்களவைத் தொகுதிகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 292 இடங்களிலும், இந்தியா கூட்டணி 234 இடங்களிலும் வென்றது. இதில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள பாஜக தனித்து 240 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றியிருந்தது.

அதே சமயம் தமிழகத்தில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி மொத்தம் உள்ள 39 இடங்களையும் வென்றது. புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதியில் இந்தியா கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சி வென்றது. இந்த மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் அதிமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் தோல்வியடைந்தது. இந்நிலையில் மக்களவைத் தேர்தல் தோல்வி தொடர்பாகக் கட்சி நிர்வாகிகளுடன் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

அந்த வகையில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். இது தொடர்பாக இன்று (10.07.2024) முதல் வரும் 19 ஆம் தேதி வரை தொகுதி வாரியாக மாவட்ட நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்த உள்ளார். அதன்படி இன்று காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற மக்களவைத் தொகுதிக்குட்பட்ட தலா 6 சட்டமன்றத் தொகுதிகளின் நிர்வாகிகளிடம் தேர்தல் தோல்விக்கான காரணம் குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகிறார். இந்த ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்கக் கூடிய நிர்வாகிகள் செல்போன் கொண்டு வரவும் தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Next Story

நடிகைக்காக ரசிகரைக் கொன்ற நடிகர்; சினிமாவை மிஞ்சும் ரியல் சம்பவம் - கதிகலங்கும் திரையுலகம்

Published on 17/06/2024 | Edited on 17/06/2024
Shocking information in Darshan Pavithra Gowda Renuka Swamy case

கடந்த ஜூன் 9 ஆம் தேதி பெங்களூருவில் உள்ள காமாட்சி பாளையா என்ற பகுதியில் இளைஞர் ஒருவரின் சடலம் கிடந்துள்ளது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இளைஞரின் உடலை மீட்டு பிரேதப்பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், சடலமாகக் கிடந்தவர் சித்துரதுர்காவைச் சேர்ந்த ரேணுகா சாமி என்றும் அவர் மருந்தகத்தில் பணியாற்றி வந்தார் என்று தெரியவந்தது.   

இதனைத் தொடர்ந்து ரேணுகா சாமியிடம் பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக ஏற்பட்ட தகாறாறு காரணமாக தாங்கள்தான் கொலை செய்தோம் என்று 4 பேர் காவல்நிலையத்தில் சரணடைந்துள்ளனர். இதனால் சந்தேகமடைந்த போலீசார் விசாரணையைத் தீவிரப்படுத்தினர். அதில் பிரபல கன்னட நடிகர் தர்ஷனுக்கு அவரது தோழியுமான நடிகையுமான பவித்ரா கௌடாவுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது.   

நடிகர் தர்ஷனுக்கு ஏற்கெனவே விஜயலட்சுமி என்ற பெண்ணுடன் திருமணமாகி பிள்ளைகள் உள்ளனர். ஆனால் தர்ஷன் தன்னை மிரட்டி அடித்துத் துன்புறுத்துவதாகக் கூறி அவரை விட்டுப் பிரிந்துசென்றுள்ளார். இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. அதே சமயம் நடிகையும், மாடலுமான பவித்ரா கௌடாவுக்கு ஏற்கெனவே திருமணமாகி விவகாரத்து ஏற்பட்டு கணவரைப் பிரிந்து வாழ்ந்து வருகிறார். இந்த நிலையில் தர்ஷனுக்கும், பவித்ரா கௌடாவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் திருமணம் செய்து கொள்ளாமல் ரிலேஷன்ஷிப்பில் வாழ்ந்துவந்துள்ளனர். தர்ஷனின் ரசிகரான ரேணுகா சாமி தர்ஷனும் - விஜயலட்சுமியும் பிரிந்ததற்கு பவித்ராதான் காரணம் என்று பவித்ராவின் இன்ஸ்டாகிரமில் ஆபாசமாகப் பேசி குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார். மேலும் பவித்ரா பிரிந்து சென்றால்தான் தர்ஷனும், விஜயலட்சுமியும் ஒன்றாக வாழ்வார்கள் எனக் கடுமையான வார்த்தைகளில் பேசி ஆபாசப் படங்களையும் குறுஞ்செய்தியாக அனுப்பியிருக்கிறாராம். 

Shocking information in Darshan Pavithra Gowda Renuka Swamy case

இதனைப் பவித்ரா தர்ஷனிடம் சொல்ல, தனது ஆட்களை வைத்து ரேணுகா சாமியைக் கடத்தி வரச் சொல்லியிருக்கிறார். அதன்பேரில் அவரது ஆட்கள் தர்ஷனின் நெருங்கிய நண்பரான வினய் குமாரின் வீட்டிற்குக் கடத்தி வந்துள்ளனர். பின்னர் அங்கு வந்த தர்ஷனும், பவித்ராவும் தங்களது ஆட்களை வைத்து ரேணுகா சாமியைக் கடுமையாகத் தக்கியுள்ளனர். அதில் ரேணுகா சாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். தர்ஷன் - பவித்ரா இருவரின் உத்தரவின் பேரிலேயே இந்தக் கொலை அரங்கேறி இருப்பதாக போலீஸில் சரண் அடைந்தவர்கள் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துள்ளனர். 

இது தொடர்பாக போலீசார் ரேணுகா சாமி உடல் கிடந்த இடத்தில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தபோது வினய் குமாரின் காரில் இருந்து ரேணுகா சாமியின் உடல் வீசப்படுவது பதிவாகியுள்ளது. மேலும் ரேணுகா சாமி கொலை செய்யப்பட்ட இடத்திற்கு தர்ஷனும் பவித்ராவும் காரில் வந்துள்ளதையும், இருவரது செல்போன் சிக்னல் அதே இடத்தில் இருந்ததையும் உறுதி செய்த போலீசார் தர்ஷன், பவித்ரா உட்பட 10 பேரைக் கைது செய்த போலீசார் தீவிரமாக விசாரணை நடத்திவருகின்றனர். மறுபுறம் தர்ஷனின் ரசிகர்கள் போலீஸுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் ரேணுகா சாமியின் பிரேதப்பரிசோதனை அறிக்கையில், தர்ஷன், பவித்ரா மற்றும் அவரது ஆட்கள் ரேணுகாசாமி மீது மின்சாரத்தை செலுத்தி கொடூரமாகக் கொன்றிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கில் நடிகை ரம்யா, நடிகர் கிச்சா சுதிப் உள்ளிட்ட திரை பிரபலங்கள் ரேணுகா சாமிக்கு நீதிவேண்டும் என்று போர்க்கொடி தூக்கியுள்ளனர்.