/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/270_3.jpg)
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராக வலம் வரும் பா.ரஞ்சித் 'நீலம் புரொடக்சன்ஸ்' என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். இவர் தயாரிப்பில் 'பரியேறும் பெருமாள்', 'இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு', 'ரைட்டர்' மற்றும் 'குதிரைவால்' போன்ற படங்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அந்த வகையில் 'சேத்துமான்' படத்தை தொடர்ந்து தற்போது 'J.பேபி' படத்தை தயாரித்து வருகிறார். அதோடு 'விக்டிம்' என்ற ஆந்தாலஜி படத்தை தொடர்ந்து தற்போது 'வேட்டுவம்' படத்தை இயக்கி தயாரித்தும் வருகிறார்.
இந்நிலையில் பா.ரஞ்சித் தயாரிப்பில் உருவாகும் புதிய படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன் படி இப்படத்தில் ஷாந்தனு, அசோக்செல்வன், கீர்த்திபாண்டியன், யோகிபாபு , உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். கோவிந்த் வசந்தா இசையமைக்கும் இப்படத்தை பா.இரஞ்சித்திடம் உதவி இயக்குனராக பணியாற்றிய ஜெய்குமார் இயக்குகிறார். கிரிக்கெட் விளையாட்டை மையமாகக்கொண்டு உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)