Skip to main content

“தேவர் மகன், சின்னக் கவுண்டருக்கு ஏன் கேள்வி எழுப்பப்படவில்லை” - பா.ரஞ்சித்

Published on 09/04/2024 | Edited on 09/04/2024
pa.ranjith latest speech

நீலம் பண்பாட்டு மையம் சார்பில் ‘ரோஸி திரைப்பட விழா’ நடைபெற்றது. இதன் தொடக்க விழாவில் பா.ரஞ்சித் மற்றும் பாலாஜி சக்திவேல் கலந்துகொண்டனர். அப்போது பா.ரஞ்சித் பேசுகையில், “இந்திய சினிமா, ஆரம்பகாலக்கட்டத்தில் புராண சினிமாக்களை உருவாக்கி வந்தது. பின்பு சுதந்திரம் பேசும் சினிமாக்களை உருவாக்கியது. அதையடுத்து தமிழ்நாட்டில் ஒரு மாற்றம் நிகழ்ந்தது. திராவிடக் கட்சிகளை பற்றியும் அவர்களது கொள்கைகளைப் பற்றிய்ம் பேசும் படங்கள் வெளிவந்தது. அந்தச் சமயத்தில் தான் அண்ணாதுரை, கலைஞர், பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் போன்ற நிறைய சமூக செயற்பாட்டாளர்கள் வந்தார்கள். அவர்கள், சினிமாவை சமூக ரீதியாக புரிந்து, மக்களுக்கு சமூக கருத்தை சேர்த்து, ஒரு பிரச்சார யுக்தியாக பயன்படுத்தினார்கள். தமிழகத்தில் இது முக்கியமான மாற்றமாக அமைந்தது. திராவிட இயக்கங்கள் எல்லா கலை இலக்கிய ஊடகத்தையும் தங்களது பிரச்சாரத்திற்காக பயன்படுத்தினார்கள். 

அதைத் தொடர்ந்து எம்.ஜி.ஆர் காலகட்டம் வருகிறது. அப்போது நாயகன் பிம்பம் ஆரம்பமாகிறது. திராவிட ஆட்சி உருவானதும் சினிமா கமர்ஷியலை நோக்கி வேறொன்றாக மாறுகிறது. அதில் தான் கமல், ரஜினி வருகிறாரக்ள். இதே காலக்கட்டத்தில் இன்னொரு மாற்றம் நிகழ்கிறது. பாரதிராஜா, பாலுமகேந்திரா வருகிறார்கள். அதன் பிறகு தமிழ் சினிமாவில் மிகப்பெரிய மாற்றங்கள் உருவாகிறது. பாலுமகேந்திரா படங்கள் அழகியலைப் பேசியது. பாரதிராஜா படங்கள் எளிய மக்களின் வாழ்வியலைப் பேசியது.    

இந்தச் சூழலில் வேறொன்றுக்கு சினிமா மாறியது. 90 களில் சினிமாவில் சாதிய படஙகள் வர தொடங்கியது. தேவர் மகன், சின்னக்கவுண்டர், பெரியவீட்டு பண்ணைக்காரன் என ஏகப்பட்ட படங்கள் வந்தது. சமூக சீர்திருத்தத்தை பேசிய தமிழ் சினிமாவில், நான் இந்தச் சாதிடா, எனக்கு இப்படி ஒண்ணு இருக்குடா, அப்புடி ஒண்ணு இருக்குடா... என முற்றிலும் வேறொரு விஷயம் நடந்தது. இது மொத்தமாக சினிமாவின் முகத்தையே மாற்றி தன்னுடைய சாதி பெருமைகளை இயல்பாக பேசியது. இது விவாதத்திற்கு உள்ளாக்கப்பட்டதா என்றால் இல்லை. அது ஏன் விவாதத்திற்கு உள்ளாக்கப்படவில்லை என்பது முக்கியமான கேள்வி. இன்றைக்கு ஒரு படம் எடுக்கிறோம் என்றாலே, ரொம்ப ஆரோக்கியமா இருக்கிற சினிமாவில் ஏன் பட்டியல் சாதிய மனநிலையில் இருந்து படமெடுக்குறீர்கள், படமெடடுப்பதால் தான் சாதிய புத்தியே வருகிறது, இதுவரை நாங்க சாதியே பார்த்ததில்லை, நீங்க தான் வந்து இதை மாத்திட்டீங்க என்ற ஒரு கதை இருக்கு. அந்தக் கதைக்கு முன்னாடி, வந்த சாதிய படங்களுக்கு ஏன் கேள்வி எழுப்பவில்லை. 

பராசத்தி போன்ற அரசியல் எழுச்சியை உருவாக்கிய தமிழ் சினிமாவில், அதற்கு முரணாக சாதிய பெருமைகளை பேசிய படங்கள் பெரியளவு வந்தபிறகும் எந்த விவாதங்களும் நடக்கவில்லை. யாருமே விமர்சனத்திற்கு உள்ளாக்கப்படவும் இல்லை. பொது தளத்தில் எந்தக் கேள்வியும் எழுப்பபடாமல் ரொம்ப இயல்பா நடந்திட்டு வந்தது. இப்பவும் அது தொடர்கிறது. நமக்கு எதிரா எடுக்கிறோம் என்ற பெயரில் வேறொரு பெயரில் நடக்கிறது. என்னைப் பொறுத்தவரை அந்த சினிமாக்கள் எதிரான சினிமாவே இல்லை. அது இயல்பான சினிமா. ஆரம்பகாலக்கட்டதிலிருந்து இருக்கிற தமிழ் சினிமா தான் அது. அதற்கும் இப்ப எடுக்கிற சினிமாவிற்கும் எந்தவிதமான வேறுபாடும் எனக்கு தெரியவில்லை” என ஆதங்கத்துடன் பேசினார். 

சார்ந்த செய்திகள்

Next Story

“பா.ரஞ்சித் யார் எனத் தெரியாது” - அமைச்சர் சேகர் பாபு

Published on 22/07/2024 | Edited on 22/07/2024
sekar babu about pa ranjith

இயக்குநர் பா.ரஞ்சித் சமீபத்தில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை தொடர்பாக தி.மு.க. அரசு மீது பல்வேறு கேள்விகளை முன்வைத்திருந்தார். அதில் திமுக அரசு, ஆட்சியில் அமர மிக முக்கிய காரணமாக அமைந்தது கணிசமான பட்டியலின மக்களின் வாக்குகள் என்பது வரலாறு. உங்கள் ஆட்சிக்கு மிகப்பெரிய ஆதரவைக் கொடுத்தது பட்டியலின மக்கள் என்பதை நீங்கள் அறியாமல் இருக்கிறீர்களா? அல்லது அறிந்தும் அக்கறையின்றி இருக்கிறீர்களா? உள்ளிட்ட பல கேள்விகள் அடங்கும்.   

இதையடுத்து ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு நீதி வேண்டி நேற்று சென்னையில் பேரணி நடத்தினார். அதில் 8 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த நிலையில் பா. ரஞ்சித் யார் என எனக்கு தெரியாது என அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார். வடசென்னை வளர்ச்சி திட்டத்தின் கீழ் பொதுப்பணித் துறைக்கு சொந்தமான பயன்படுத்தப்படாத இடங்களை புதிய திட்டங்களுக்கு செயல்படுத்துவது தொடர்பாக ஆய்வு மேற்கொண்டபின் செய்தியாளர்களை சந்தித்தார் சேகர் பாபு. அப்போது அவரிடம் பா.ரஞ்சித் பேசியது தொடர்பாக கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பா.ரஞ்சித் யார் என தெரியாது என்ற அவர், “அரசியல்வாதி என்றால் எனக்கு தெரியும். இவரை எனக்குத் தெரியாது” எனப் பதிலளித்தார். 

முன்னதாக பா.ரஞ்சித்தின் கேள்விகளுக்கு திமுக தரப்பிலிருந்து அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர், வழக்கறிஞர் சரவணன், “தமிழ் நாட்டின் காவல்துறை சிறப்பான அமைப்பு. இந்த வழக்கில் எல்லா குற்றவாளிகளையும் கண்டறிந்து, அவர்கள் யாராக இருந்தாலும் சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை வாங்கித் தரக்கூடிய வல்லமை பெற்றவர்கள்” என விளக்கம் அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story

நினைவேந்தல் பேரணி - நடிகர்கள் பங்கேற்பு  

Published on 20/07/2024 | Edited on 20/07/2024
pa ranjith rally for armstrong passed away

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 05.07.2024 அன்று இரவு பெரம்பூரில் உள்ள அவரது வீட்டின் அருகே 6 பேர் கொண்ட மர்ம கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தமிழகத்தை உலுக்கிய நிலையில், கொலை வழக்கில் ஏகப்பட்ட திருப்பங்கள் நடந்து வருகிறது. முதலில் 11 பேரை கைது செய்தனர் போலீஸார். பின்பு சில நாட்கள் கழித்து போலீஸாரின் பிடியிலிருந்து தப்பிய ஓடியதாக கூறி திருவேங்கடம் என்பவரை என்கவுண்டரில் சுட்டுக் கொன்றனர் காவல் துறையினர். இதையடுத்து இதுவரை கைது செய்த 14 பேரரிடமும் போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

இதனிடையே ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு நீதி வேண்டி நினைவேந்தல் பேரணி நடத்தவுள்ளதாக இயக்குநர் பா.ரஞ்சித் அறிவித்திருந்தார். அதன்படி இன்று சென்னை எழும்பூர் ரமடா ஹோட்டல் அருகே பா.ரஞ்சித்தின் தலைமையில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஒன்று கூடினர். அங்கிருந்து தொடங்கிய பேரணி ராஜரத்தினம் மைதானம் அருகே நிறைவடையவுள்ளது. இதில் பா.ரஞ்சித்துடன், மன்சூர் அலிகான், நடிகர் தினேஷ் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினரும் கலந்து கொண்டனர்.