/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/411_30.jpg)
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 05.07.2024 அன்று இரவு பெரம்பூரில் உள்ள அவரது வீட்டின் அருகே 6 பேர் கொண்ட மர்ம கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தமிழகத்தை உலுக்கிய நிலையில், கொலை வழக்கில் ஏகப்பட்ட திருப்பங்கள் நடந்து வருகிறது. முதலில் 11 பேரை கைது செய்தனர் போலீஸார். பின்பு சில நாட்கள் கழித்து போலீஸாரின் பிடியிலிருந்து தப்பிய ஓடியதாக கூறி திருவேங்கடம் என்பவரை என்கவுண்டரில் சுட்டுக் கொன்றனர் காவல் துறையினர். இதையடுத்து இதுவரை கைது செய்த 14 பேரரிடமும் போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு நீதி வேண்டி நினைவேந்தல் பேரணி நடத்தவுள்ளதாக இயக்குநர் பா.ரஞ்சித் அறிவித்திருந்தார். அதன்படி இன்று சென்னை எழும்பூர் ரமடா ஹோட்டல் அருகே பா.ரஞ்சித்தின் தலைமையில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஒன்று கூடினர். அங்கிருந்து தொடங்கிய பேரணி ராஜரத்தினம் மைதானம் அருகே நிறைவடையவுள்ளது. இதில் பா.ரஞ்சித்துடன், மன்சூர் அலிகான், நடிகர் தினேஷ் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினரும் கலந்து கொண்டனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)