Published on 23/09/2021 | Edited on 23/09/2021
![yogi babu](http://image.nakkheeran.in/cdn/farfuture/fW0LdqXjEf0HixVlBF47wJaXHtlumqZBo-rlX4mVRrU/1632379619/sites/default/files/inline-images/78_29.jpg)
கடந்த 2009ஆம் ஆண்டு வெளியான ‘நாளை நமதே’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு நாயகியாக அறிமுகமான நடிகை ஓவியா, பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டதன் மூலம் மிகவும் பிரபலமடைந்தார். அதனைத் தொடர்ந்து, அடுத்தடுத்து பல படங்களில் நடித்தாலும் அவர் நடிப்பில் வெளியான எந்தப் படமும் பெரிய அளவில் வெற்றிபெறவில்லை. இந்த நிலையில், ஓவியா நடிக்கும் அடுத்த படம் குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகரான யோகி பாபு கதாநாயகனாக நடிக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக ஓவியா நடிக்க உள்ளார். இப்படத்தை அன்கா மீடியா நிறுவனம் தயாரிக்க உள்ளது. இது அன்கா மீடியா நிறுவனத்தின் முதல் படமாகும். இப்படம் தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ள படக்குழு, இப்படத்தின் பணிகள் வரும் 24ஆம் தேதி பூஜையுடன் தொடங்கவுள்ளதாக அறிவித்துள்ளது.