'பிங்க்' படத்தின் தமிழ் ரீமேக்கான 'நேர்கொண்ட பார்வை' படத்தில் நடித்து வருகிறார் அஜித். போனிகபூர் தயாரித்து, எச்.வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தில் வித்யா பாலன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், ஆதிக் ரவிச்சந்திரன், அர்ஜூன் சிதம்பரம், அபிராமி வெங்கடாசலம், ஆண்ட்ரியா தரியங், அஸ்வின் ராவ், சுஜித் சங்கர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் ஹைதராபாத் ராமோஜி பிலிம் சிட்டியில் ஆரம்பித்து விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் படத்தின் மொத்த படப்பிடிப்பும் முடிந்து விட்டதாக தற்போது தகவல் கசிந்துள்ளது. மேலும் படத்தின் பின்னணி வேலைகளை விரைவில் ஆரம்பிக்கவுள்ளதாகவும், கூடவே இரண்டாவது லுக் போஸ்டரையும் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் கசிந்துள்ளது. 'நேர்கொண்ட பார்வை' வரும் ஆகஸ்ட் மாதம் 10ஆம் தேதி வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.