Skip to main content

"இரண்டாவது பாகம் தொடங்கப்படும்" - சீனுராமசாமி அறிவிப்பு

Published on 30/11/2022 | Edited on 30/11/2022

 

neerparavai 2 will start seenuramasamy tweeted

 

சீனுராமசாமி இயக்கத்தில் கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியான படம் 'நீர்ப்பறவை'. இப்படத்தில் முதன்மைக் கதாபாத்திரத்தில் விஷ்ணு விஷாலும், சுனைனாவும் நடிக்க சரண்யா பொன்வண்ணன், சமுத்திரக்கனி, நந்திதா தாஸ் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். பலரின் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. 

 

இந்நிலையில் இப்படம் வெளியாகி இன்றுடன் 10 ஆண்டுகள் ஆகிறது. இதனை முன்னிட்டு சீனுராமசாமி தனது சமூக வலைதள பக்கத்தில் படக்குழுவிற்கு நன்றி தெரிவித்து ஒரு பதிவை பகிர்ந்துள்ளார். அதில், "நீர்ப்பறவை பாகம் இரண்டு தொடங்கப்படும். இப்படத்தை அதன் பத்தாண்டுகளில் தங்கள் இதயங்களில் கூடுகட்ட அனுமதித்த மக்களுக்கும், என் கலைப்பெருமக்களுக்கும் நன்றி" எனக் குறிப்பிட்டுள்ளார். 

 

இதுவரை 8 படங்களை இயக்கியுள்ள சீனுராமசாமி எந்தப் படத்துக்கும் இரண்டாம் பாகம் உருவாக்குவதாக அறிவித்ததில்லை. முதல் முறையாக இரண்டாம் பாகம் உருவாகும் என அறிவித்துள்ளதால் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. விரைவில் இப்படத்தின் அடுத்த அப்டேட்டை சீனுராமசாமி வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.  

 

சீனுராமசாமி மற்றும் விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவாகியுள்ள மற்றொரு படம் 'இடம் பொருள் ஏவல்'. இப்படத்தில் விஷ்ணு விஷால், விஜய் சேதுபதி, நந்திதா ஸ்வேதா, ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்டோர் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். பணிகள் அனைத்தும் முடிந்த நிலையில் விரைவில் இப்படம் வெளியாகும் எனப் படக்குழு அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

‘தேரு போல அசஞ்சு வந்தவளே...’ - குத்தாட்டம் போடும் ஜி.வி. பிரகாஷ்

Published on 24/02/2024 | Edited on 24/02/2024
Idimuzhakkam first single released

ஜி.வி. பிரகாஷ் நடிகராக இடி முழக்கம், 13, கள்வன், டியர், கிங்ஸ்டன் உள்ளிட்ட படங்களைக் கைவசம் வைத்துள்ளார். இசையமைப்பாளராக தங்கலான், அமரன், சூர்யாவின் 43வது படம் என ஏகப்பட்ட படங்களில் பணியாற்றுகிறார். 

இதில் சீனு ராமசாமி இயக்கத்தில் இடி முழக்கம் உருவாகி வருகிறது. கலைமகன் முபாரக் தயாரிக்கும் இப்படத்தில் காயத்ரி, கஞ்சா கருப்பு, சரண்யா பொன்வண்ணன், எம்.எஸ். பாஸ்கர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். என்.ஆர். ரகுநந்தன் இசைப் பணிகளை மேற்கொண்டுள்ளார். இப்படம் கடந்த மாதம் நடந்த பூனே சர்வதேசத் திரைப்பட விழாவில் இந்திய சினிமா பிரிவில் திரையிடப்பட்டது. 

இந்த நிலையில் இப்படத்தின் முதல் பாடலாக  ‘அடி தேனி சந்தையில்...’ என்ற பாடலின் லிரிக் வீடியோ வெளியாகியுள்ளது. விஜய் சேதுபதி இப்பாடலைத் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டு படக்குழுவிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். வரதன் எழுதியுள்ள இப்பாடலை அந்தோனி தாசன் மற்றும் மீனாட்சி இளையராஜா இணைந்து பாடியுள்ளனர். திருவிழாவில் நடக்கும் குத்து பாடலாக இப்பாடல் அமைந்துள்ள நிலையில், பாடலுக்கேற்ற குத்தாட்டம் போட்டுள்ளார் ஜி.வி. பிரகாஷ்.

Next Story

அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் விஷ்ணு விஷால்

Published on 05/02/2024 | Edited on 05/02/2024
vishnu vishal new movie with arunraja kamaraj

லால் சலாம், மோகன்தாஸ், ஆர்யன் உள்ளிட்ட படங்களை விஷ்ணு விஷால் கைவசம் வைத்துள்ளார். மேலும் ராம்குமார் இயக்கத்தில் ஒரு படம் நடித்து வருகிறார். இதில் லால் சலாம் படத்தை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கி வரும் நிலையில், ரஜினி சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார். இப்படம் வருகிற பிப்ரவரி 9 ஆம் தேதி வெளியாகவுள்ளது. 

இதனைத் தொடர்ந்து இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, காஷ்மோரா உள்ளிட்ட சில படங்களை இயக்கிய கோகுல் இயக்கத்தில் ஒரு படமும், கட்டா குஸ்தி பட இயக்குநர் செல்லா அய்யாவு இயக்கத்தில் ஒரு படமும் தயாரித்து நடிக்கவுள்ளார். 

இந்த நிலையில், தற்போது விஷ்ணு விஷால் நடிக்கும் புது படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் இப்படத்தை தயாரிக்கிறார். ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தினை பெரும் பொருட்செலவில் பிரம்மாண்டமாக தயாரிக்கவுள்ளது. இப்படத்தின் தலைப்பு, படத்தில் பணியாற்றவுள்ள நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் படம் குறித்த மற்ற விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.