Narudi Brathuku Natana movie team recognize kamal

தெலுங்கில் நேற்று(25.10.2024) வெளியான படம் ‘நருடி பிராதுகு நடனா’. ரிஷிகேஷ்வர் யோகி இயக்கியுள்ள இப்படத்தில் தயானந்த் ரெட்டி, சிவகுமார் ராமச்சந்திரவரபு, நிதின் பிரசன்னா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தை சுகுமார் போரெட்டி, விவேக் குச்சிபோட்லா உள்ளிட்ட நான்கு பேர் தயாரித்துள்ளனர். நிக்ஸ் லோபஸ் என்பவர் இசையமைத்துள்ளார்.

இந்தப் படம் 60க்கும் மேற்பட்ட சர்வதேச விருதுகளை வாங்கியுள்ளதாக தெரிவித்துள்ளனர். ஒரு பெரிய நடிகராக போராடும் ஒரு இளைஞனின் வாழ்க்கையை மையப்படுத்தி இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று வரும் இந்தப் படம் கமல்ஹாசனை அங்கீகரிக்கும் விதமாக எடுக்கப்படுள்ளதாக படத்தின் இயக்குநர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில், “இந்தப் படம் கமல்ஹாசனுக்கான ட்ரிபியூட். ஆரம்பத்தில் கமல் என்றே படத்திற்கு தலைப்பு வைக்கப்பட்டது. ஆனால் அந்த தலைப்பு எங்களுக்கு கிடைக்கவில்லை. இருப்பினும் படத்தில் அவரை சிறந்த முறையில் மரியாதை செய்ய முயற்சித்தேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Advertisment

மலையாளத்தில் கடந்த பிப்ரவரியில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ படம் கமலின் குணா படத்தை மரியாதை செய்யும் விதமாக எடுக்கப்பட்டதாக அப்படத்தின் இயக்குநர் சிதம்பரம் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.