Skip to main content

“இளம் தலைமுறையினர் அவலத்தை பேசியிருக்கிறோம்” - இயக்குநர் பிரசாத் ராமர்

Published on 28/02/2024 | Edited on 28/02/2024
Nalla Perai Vaanga Vendum Pillaigale movie press meet

ப்ரீத்தி கரண், செந்தூர் பாண்டியன், சுரேஷ் மதியழகன், பூர்ணிமா ரவி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே’. பிரசாத் ராமர் இயக்கியுள்ள இப்படத்தில் பிரபல பாடகர் பிரதீப் குமார் இசையமைத்து தயாரித்துள்ளார். 

இப்படம் குறித்து இயக்குநர் பிரசாத் ராமர் கூறுகையில், “இப்படம் ஒரு வளர்ந்து வரும் குழந்தைகளை பற்றிய படம். படத்தில் ஒரு ட்ராவலும் இருக்கும். ரெண்டு பசங்க மதுரையிலிருந்து கிளம்பி ஒரு பொண்ண பார்ப்பதற்காக மாயவரம் போவாங்க. அந்த பசங்களின் நோக்கம் நடக்குதா இல்லையா என்பது தான் கதை. 2019ல் ஆரம்பிக்கப்பட்ட படம் இது. வேகமாக மாறிவரும் சமுதாயத்தில் இளம் தலைமுறையினர் படும் அவலத்தையும், அவர்கள் மீதான அணுகுமுறையையும் இந்த படம் பேசுகிறது. மதுரை மற்றும் மாயவரம் ஆகிய இடங்களில் 42 நாட்கள் படப்பிடிப்பு நடத்தினோம். போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் இறுதிக்கட்டத்தில் உள்ளது. அடுத்த மாதம் வெளியிட திட்டமிட்டிருக்கிறோம்” என்றார்.

சார்ந்த செய்திகள்

Next Story

‘ஒரு நொடி’ - டீசரும் ட்ரைலரும் ஒரே நாளில் வெளியீடு 

Published on 12/04/2024 | Edited on 13/04/2024
oru nodi teaser and trailer released

அறிமுக இயக்குநர் மணிவர்மன் இயக்கத்தில் தமன்குமார் நாயகனாக நடிக்கும் படம் ‘ஒரு நொடி’. எம்.எஸ். பாஸ்கர், வேல ராமமூர்த்தி, பழ கருப்பையா, கஜராஜா, தீபா ஷங்கர், ஸ்ரீரஞ்சனி ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். அறிமுக இசையமைப்பாளர் சஞ்சய் மாணிக்கம் இசையமைக்கிறார்.  

இந்த படம் ஏப்ரல் 26 ஆம் தேதி ரிலீசாக இருக்கிறது. இப்படத்தின் ஆடியோ வெளியீடு மற்றும் அடுத்தடுத்த அப்டேட்கள் வெளியிட இருக்கிறார்கள். இந்த நிலையில் இப்படத்தின் டீசர் மற்றும் ட்ரைலர் வெளியாகியுள்ளது. ஆர்யா இதனை வெளியிட்டுள்ளார். அதே நேரத்தில் தமிழ் திரையுலகில் முதல் முறையாக இப்படத்தின்டீசரும் ட்ரைலரும் தமிழ்நாடு முழுக்க 150 வெவ்வேறு திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. 

இப்படத்தை ‘காற்றின் மொழி’, ‘இவன் தந்திரன்’, ‘கோடியில் ஒருவன்’, ‘கொலைகாரன்’ போன்ற படங்களை வெளியிட்ட விநியோகஸ்தருமான தனஞ்செயன் இப்படத்தை வழங்குகிறார். மதுரை அழகர் மூவிஸ் மற்றும் வொயிட் லேம்ப் பிக்சஷர்ஸ் தயாரிக்கிறது.

Next Story

கதாநாயகனாக அறிமுகமாகும் நாகேஷ் பேரன்

Published on 11/04/2024 | Edited on 11/04/2024
nagesh grandson make his debut as hero in vaanaran

ஸ்ரீராம் பத்மநாபன் இயக்கத்தில் நாகேஷ் பேரன் பிஜேஷ் நாகேஷ் கதாநாயகனாக அறிமுகமாகும் படம் வானரன். ஆரஞ்ச் பிக்சர்ஸ் சார்பில் ராஜேஷ் பத்மநாபன், சுஜாதா ராஜேஷ் தயாரித்துள்ள இப்படத்தில் அக்‌ஷயா கதாநாயகியாக நடிக்க லொள்ளு சபா ஜீவா, தீபா சங்கர், ஆதேஷ் பாலா, நாஞ்சில் விஜயன், எஸ்.எல் பாலாஜி, பேபி வர்ஷா, வெங்கட்ராஜ் , சிவகுரு, ராம்ராஜ், வெடிக்கண்ணன், மேடை கலைஞர்களான நாமக்கல் விஜயகாந்த், ஜூனியர் டி.ஆர் ஆகியோர் நடித்துள்ளனர். ஷாஜகான் பின்னணி இசையும், செந்தமிழ் பாடல்களையும் இயற்றியுள்ளனர். 

nagesh grandson make his debut as hero in vaanaran

இப்படத்தில் மூன்று பாடல்கள் இடம் பெற்றுள்ளன. இதன் படப்பிடிப்பு சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள இடங்களிலும் 30 நாட்களில் திட்டமிட்டபடி ஒரே கட்ட படப்பிடிப்பாக நடைபெற்று முடிவடைந்தது. இதன் நிறைவு கட்ட பணிகள் முடிவடைந்த நிலையில் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இப்படம் பகல் வேஷம் என்னும் கலையை பின் தொடரும் ஆஞ்சநேயர் வேடம் அணிபவர்களின் வாழ்வியலையும், தந்தை மகள் உறவை சொல்லும் கதைக் களத்தையும் கொண்டு உருவாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.