Skip to main content

"அவரது எதிர்பாராத மறைவு நடிகர் சமூகத்துக்கு மாபெரும் இழப்பாகும்" - நடிகர் சங்கம் இரங்கல்!

Published on 06/05/2021 | Edited on 06/05/2021

 

vgdagv

 

பிரபல நகைச்சுவை நடிகர் பாண்டுவுக்கு கரோனா மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டதில், அவருக்கு கரோனா இருப்பது உறுதியானது. இதையடுத்து, அவர் சென்னை கிண்டியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். இந்த நிலையில், இன்று (06/05/2021) சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார், அவருக்கு வயது 74. பாண்டுவின் இந்த திடீர் மறைவுக்குப் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில், தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பாக இரங்கல் தெரிவித்து அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில்... 

 

"நடிகர் பாண்டு அவர்கள் கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் திடீர் மரணம் அடைந்தார் என்ற செய்தி அதிர்ச்சியும் மிகுந்த வேதனையும் அளிக்கிறது. கோவிட் பாதிப்பின் காரணமாக பாண்டு மற்றும் அவரது மனைவி குமுதா சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று அதிகாலை பாண்டு மரணமடைந்தார். 'கரையெல்லாம் செம்பகப் பூ' என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி நகைச்சுவை நடிகராகவும் குணச்சித்திர நடிகராகவும் புகழ் பெற்றார். 'சிரித்து வாழ வேண்டும்', 'கடல் மீன்கள்', 'பணக்காரன்', 'நடிகன்', 'நாளைய தீர்ப்பு', 'ராவணன்', 'முத்து', 'உள்ளத்தை அள்ளித் தா', 'நாட்டாமை', 'காதல் கோட்டை', 'வாலி', 'கில்லி', 'சிங்கம்', 'காஞ்சனா-2' போன்ற பல ஹிட் படங்கள் உட்பட 230க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ளார். டி.வி. சீரியலிலும் நடித்துள்ளார். 

 

பாண்டு சிறந்த ஓவியராகவும் தன் திறமைகளை வெளிப்படுத்திய கலைஞர் ஆவார். எழுத்துகள் வடிவமைக்கும் டிசைனராக கேபிட்டல் லெட்டர்ஸ் என்ற கம்பெனி மூலம் உலகம் முழுக்க அறியப்பட்டவராக இருக்கிறார். இவரது மனைவியும் ஓவியர் தான். இவரது எதிர்பாராத மறைவு நடிகர் சமூகத்துக்கு மாபெரும் இழப்பாகும். அன்னாரது மறைவால் துயரத்தில் வாடும் குடும்பத்தாரின் துக்கத்தில் நடிகர் நடிகைகள் சமூகம் சார்பாக நாங்களும் பங்கு கொண்டு அவரது ஆத்மா சாந்தி அடைய வேண்டுகிறோம். நன்றி. #RIP !!" எனக் குறிப்பிட்டுள்ளனர்.

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகளுக்கு அமைச்சர் உதயநிதி உதவி

Published on 15/02/2024 | Edited on 15/02/2024
minister udhayanidhi helped to actors assoociation for nadigar sangam new building

தென்னிந்திய நடிகர் சங்க புது கட்டடம் கட்டும் பணி கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. முழுவதுமாக கட்டி முடிக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது நடிகர் சங்கம். அந்த வகையில், வங்கியில் ரூ.40 கோடி கடன் வாங்க ஒப்புதல் வாங்கியிருப்பதாக சங்க பொருளாளர் கார்த்தி 67வது சங்க பொதுக்குழுக் கூட்டத்தில் தெரிவித்திருந்தார். 

இந்த நிலையில், நடிகர் சங்க புதிய கட்டடம் முழுமையாக கட்டி முடிக்க அமைச்சர் உதயநிதி உதவியுள்ளார். நடிகர் சங்க ஆயுட்கால உறுப்பினர் என்ற முறையில் ரூ.1 கோடி நிதி உதவி செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான காசோலையை சங்க நிர்வாகிகள் நாசர், விஷால், கார்த்தி, பூச்சி முருகன், கருணாஸ் ஆகியோரை நேரில் சந்தித்து வழங்கியுள்ளார். 

இதற்காக அமைச்சர் உதயநிதிக்கு சங்க பொதுச் செயலாளர் விஷால் நன்றி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “அன்புள்ள உதயா, எங்கள் தென்னிந்திய நடிகர் சங்க கட்டடத்தை விரைவில் முடிக்க விருப்பப்பட்டு முன்வந்து உதவிய ஒரு நடிகராக, தயாரிப்பாளராக, நண்பராக, அமைச்சராக உனது பங்களிப்பிற்கு நன்றி” எனக் குறிப்பிட்டுள்ளார்.  

Next Story

“மொய் விருந்து நடத்தி பணம் வசூலிப்போம். ” - மன்சூர் அலிகான்

Published on 20/01/2024 | Edited on 20/01/2024
mansoor ali khan speech at vijayakanth memorial meet

கடந்த டிசம்பர் மாதம் 28 ஆம் தேதி உடல் நலக்குறைவு காரணமாக மறைந்த விஜயகாந்தின் நினைவையொட்டி, தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் நினைவேந்தல் கூட்டம் நடைபெற்றது. சென்னை, தேனாம்பேட்டை, காமராஜர் அரங்கத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில், தலைவர் நாசர், பொதுச்செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி, துணைத்தலைவர்கள் கருணாஸ், பூச்சி முருகன் என நடிகர் சங்க நிர்வாகிகளுடன் நடிகர்கள் கமல், விக்ரம், சரத்குமார், ராதா ரவி, சிவகுமார், ஜெயம் ரவி உள்ளிட்ட பல நட்சத்திரங்களும் இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் மற்றும் திரையுலகில் பல பிரிவுகளில் பணியாற்றும் பலரும் கேப்டன் விஜயகாந்தின் மகன்களான விஜயபிரபாகரன், சண்முகபாண்டியன் மற்றும் அவரது மைத்துனர் சுதீஷ் உள்ளிட்ட குடும்பத்தினரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர். 

இந்த நிகழ்வில் மன்சூர் அலிகான் பேசுகையில், “விஜயகாந்த் நடிகர் சங்க தலைவராக இருந்தபோது நான் செயற்குழு உறுப்பினராக அவருடன் இணைந்து பணியாற்றியுள்ளேன். அந்த சமயத்தில் என்னிடம் சங்கத்தின் பத்திரத்தை எல்லாம் காண்பித்துள்ளார். இப்போது நடிகர் சங்க கட்டடத்தை கடன் வாங்கி கட்டுகிறார்களா என்று தெரியாது. ஆனால் விஜயகாந்த் நடித்த ஒரு படத்தில் இடம் பெற்றது போல அனைத்து நடிகர்களையும் அழைத்து விருந்தளித்து உபசரித்து மொய் விருந்து போன்று நடத்தி பணம் வசூலிப்போம். அனைவரும் தங்களால் இயன்ற தொகையை அளிக்கட்டும். கேப்டன் இருந்தபோது நடிகர் சங்கம் ஒரு ராணுவ பலத்துடன் இருந்தது. ஆட்சியாளர்கள் கூட பயந்தனர். இல்லாவிட்டால் ஒரு ராமேஸ்வரம் போராட்டத்தை நடத்திக் காட்டி இருக்க முடியுமா ? நெய்வேலி போராட்டத்தை மறக்க முடியுமா ? விஷால், நாசர் உங்களுக்கு சக்தி இருக்கிறது. இனி நடிகர் சங்கம் ஒரு ராணுவ பலத்துடன் தமிழ்நாட்டில் ஒரு அங்கமாக இருக்க வேண்டும். யாருக்கும் கட்டுப்பட வேண்டிய அவசியம் இல்லை. கேப்டன் வளாகத்தில் வருடந்தோறும் கேப்டன் பெயரில் பொங்கல் விழா நடத்த வேண்டும்” என்று கூறினார்.