Skip to main content

"என் மனதின் ஆழத்தில் இருந்து நன்றிகள்" - சீனுராமசாமிக்கு மிஷ்கின் பாராட்டு

Published on 27/06/2022 | Edited on 27/06/2022

 

mysskin praises seenuramasamy for 'mamanithan' movie

 

சீனு ராமசாமி, விஜய் சேதுபதி கூட்டணியில் மூன்றாவது முறையாக வெளியாகியுள்ள படம் 'மாமனிதன்'. முதல் முறையாக இளையராஜாவும் - யுவன் ஷங்கர் ராஜாவும் இணைந்து இசையமைத்துள்ள இப்படத்தை 'ஒய்.எஸ்.ஆர் ஃபில்ம்ஸ்' நிறுவனம் சார்பாக யுவன் ஷங்கர் ராஜா தயாரித்துள்ளார். ரிலீஸ் தேதியில் பலமுறை மாற்றம் செய்யப்பட்டு தற்போது வெளியாகியிருக்கும் இப்படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கிறது. ரசிகர்கள் மற்றும் திரைபிரபலங்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை சமூக வலைதளப்பக்கத்தில் தெரிவித்து வருகின்றனர். சமீபத்தில் கூட இயக்குநர் ஷங்கர், ரஜினி உள்ளிட்ட பலரும் படத்தை பாராட்டி இருந்தனர். 

 

அந்த வகையில் இயக்குநர் மிஷ்கின் தற்போது 'மாமனிதன்' படத்தை பார்த்து பாராட்டியுள்ளார். இது தொடர்பான ட்விட்டர் பதிவில், "எல்லா சாமானியர்களின் வாழ்க்கையிலும் விதி என்னும் சூறாவளி அவ்வப்போது வாழ்க்கையை உடைத்துப் போடுகிறது. மிக எளிமையாக எடுக்கப்பட்ட ஒரு அன்பு சித்திரம். இந்தப்படம் என் சிந்தனைகளை மேம்படுத்துகிறது. என் வாழ்க்கையை அர்த்தப்பட வைக்கிறது. மசாலா படங்களுக்கும் பம்மாத்துப் படங்களுக்கும் நடுவே ஒரு மேன்மையான படத்தை தந்த சீனு ராமசாமிக்கு என் மனதின் ஆழத்தில் இருந்து நன்றிகள் " என குறிப்பிட்டு படக்குழுவினரை பாராட்டியுள்ளார். 

 

மிஷ்கினின் இந்த பாராட்டிற்கு சீனுராமசாமி, " இயக்குனர் மிஸ்கின் உங்கள் வாழ்த்துகள் ராதாகிருஷ்ணன் சாவித்திரி தம்பதிகளின் வீட்டின் மீது ஒளிரும் முழுநிலவு. எனதன்பு முத்தங்கள்" என தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.  

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“ஒரு டாக்டர் ஆக்டர் ஆக விரும்புகிறான்” – மிஷ்கின்

Published on 27/02/2024 | Edited on 27/02/2024
mysskin speech in  Double Tuckerr Press Meet

ஏர் ஃபிளிக் தயாரிப்பில் மீரா மஹதி இயக்கத்தில் வித்யாசாகர் இசையில் இந்தியாவிலேயே முதல்முறையாக புதுமையாக வடிவமைக்கப்பட்டுள்ள அனிமேஷன் பாத்திரங்களுடன் தீரஜ், ஸ்மிருதி வெங்கட், கோவை சரளா எம்.எஸ். பாஸ்கர் மற்றும் பலர் நடித்திருக்கும் படம் 'டபுள் டக்கர்'. இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் படத்தில் நடித்த நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் ஆகியோருடன் இயக்குநரும் நடிகருமான மிஷ்கின் கலந்து கொண்டார்.

மிஷ்கின் பேசுகையில், “தீரஜ்ஜை எனக்கு ரொம்ப பிடிக்கும். ஏன் பிடிக்கும் என்று கேட்டால், அவன் இதுவரை குறைந்தது ஒரு 500 உயிரையாவது காப்பாற்றி இருப்பான். அவன் ஒரு இதய சிகிச்சை நிபுணர். குறைவாக சொல்கிறேன் என்று நினைக்கிறேன். இன்னும் சொல்லப்போனால் ஆயிரத்திற்கும் அதிகமான உயிர்களை காப்பாற்றிய மருத்துவர் அவன். உதய்க்கு நெருங்கிய நண்பன், நம் முதல்வரை சூழ்ந்திருக்கும் முக்கிய மருத்துவர்களில் தீரஜ்ஜும் ஒருவன். அவன் கூப்பிட்டதும், அவன் இந்த உலகத்திற்குச் செய்த சேவைக்காக என் படப்பிடிப்பை ரத்து செய்துவிட்டு நான் வந்துவிட்டேன்.

ஒரு மருத்துவராக அவன் அவனுக்கான உயரத்தினை எப்போதோ அடைந்துவிட்டான். ஆனால் அதையும் மீறி அவன் ஒரு ஆக்டர் ஆக வேண்டும் என்று விரும்புகிறான். எல்லோரும் டாக்டர் ஆக விரும்புவார்கள். ஒரு டாக்டர் ஆக்டர் ஆக விரும்புகிறான். என்னைப் பொறுத்தவரை ஒரு டாக்டர், நடிகன், இயக்குநர் மூவரும் ஒன்று தான். எல்லோரும் அறிந்தபடி டாக்டர் இதயத்தை அப்படியே திறந்து அதில் இருக்கும் பிரச்சினைகளை சரி செய்கிறார். அதுபோல் தான் கதை சொல்லியாகிய இயக்குநரும் ஒரு இதயத்தை திறக்காமல் திறந்து ரசிகனின் ரணத்தை ஆற்றி அவனை சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கிறான். ஆக மூன்று பேரும் ஒன்றுதான். என் திரைப்படங்களில் மருத்துவ தொழில்நுட்பம் சார்ந்த காட்சிகள் இடம்பெறும் போது அதில் ஏற்படும் குழப்பங்களை தீரஜ்ஜிடம் தான் கேட்பேன். அவன் தான் அதைத் தீர்த்து வைப்பான்.

சந்துரு விமானத்தில் பணியாற்றியவர். ஒரு முறை என்னுடைய விமானப் பயணத்தின் போது அறிமுகப்படுத்திக் கொண்டு சார் உங்களோட பெரிய ரசிகன், உங்கள் படங்கள் மிகவும் பிடிக்கும் என்றார். என் தொலைபேசி எண்ணை வாங்கிக் கொண்டார். இரண்டு மாதங்கள் கழித்து எனக்குப் போன் செய்து, சார் உங்களை சந்திக்க முடியுமா என்று கேட்டார். நான் வரச் சொன்னேன். வந்ததில் இருந்து சினிமாவைப் பற்றியே பேசிக் கொண்டிருந்தார். பின்னர் மீண்டும் ஆறு மாதங்கள் கழித்து என்னைப் பார்க்க வந்தார். சார் நான் படம் எடுக்கப் போகிறேன் என்றார். நான் அவனிடம் நீ உயரே பறந்து கொண்டிருக்கிறாய். ஏன் கீழே பறக்க ஆசைப்படுகிறாய் என்று கேட்டேன். அவன் இயக்கிய குறும்படத்தைப் பார்த்தேன். நல்ல மேக்கிங். ஏனோ மக்களிடம் பெரிதாக சென்று சேரவில்லை. பின்னர் ஒரு வருடம் கழித்து வந்து நான் இந்தப் படத்தில் இணை தயாரிப்பாளர் என்று கூறினார். சினிமா என்பது எவ்வளவு உயரத்தில் இருப்பவர்களாக இருந்தாலும் அவர்களைத் தன்பால் ஈர்க்கிறது.

இயக்குநர் மீரா மஹதி இந்த நிகழ்ச்சியில் உணர்ச்சிவசப்பட்டு கண் கலங்கினார். அழுகை அழகு. அதிலும் ஆண்கள் அழுவது அழகோ அழகு. என்னுடைய உதவி இயக்குநர்களுடன் நான் எப்போதுமே சினிமா பற்றி மட்டும் தான் பேசிக்கொண்டே இருப்பேன். ஒரு 50 எம்.எம் லென்ஸுக்கும் ஒரு 35 எம்.எம் லென்ஸுக்கும் 15 டிகிரி தான் வித்தியாசம். ஆனால் அந்த பதினைந்து டிகிரி வித்தியாசத்தை தெரிந்துகொள்ள 5 அல்லது 6 வருடங்கள் தேவை. தமிழ் சினிமாவில் லென்ஸைப் பற்றித் தெரிந்த ஒரு சில இயக்குநர்களில் நானும் ஒருவன்” என்றார்.

Next Story

‘தேரு போல அசஞ்சு வந்தவளே...’ - குத்தாட்டம் போடும் ஜி.வி. பிரகாஷ்

Published on 24/02/2024 | Edited on 24/02/2024
Idimuzhakkam first single released

ஜி.வி. பிரகாஷ் நடிகராக இடி முழக்கம், 13, கள்வன், டியர், கிங்ஸ்டன் உள்ளிட்ட படங்களைக் கைவசம் வைத்துள்ளார். இசையமைப்பாளராக தங்கலான், அமரன், சூர்யாவின் 43வது படம் என ஏகப்பட்ட படங்களில் பணியாற்றுகிறார். 

இதில் சீனு ராமசாமி இயக்கத்தில் இடி முழக்கம் உருவாகி வருகிறது. கலைமகன் முபாரக் தயாரிக்கும் இப்படத்தில் காயத்ரி, கஞ்சா கருப்பு, சரண்யா பொன்வண்ணன், எம்.எஸ். பாஸ்கர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். என்.ஆர். ரகுநந்தன் இசைப் பணிகளை மேற்கொண்டுள்ளார். இப்படம் கடந்த மாதம் நடந்த பூனே சர்வதேசத் திரைப்பட விழாவில் இந்திய சினிமா பிரிவில் திரையிடப்பட்டது. 

இந்த நிலையில் இப்படத்தின் முதல் பாடலாக  ‘அடி தேனி சந்தையில்...’ என்ற பாடலின் லிரிக் வீடியோ வெளியாகியுள்ளது. விஜய் சேதுபதி இப்பாடலைத் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டு படக்குழுவிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். வரதன் எழுதியுள்ள இப்பாடலை அந்தோனி தாசன் மற்றும் மீனாட்சி இளையராஜா இணைந்து பாடியுள்ளனர். திருவிழாவில் நடக்கும் குத்து பாடலாக இப்பாடல் அமைந்துள்ள நிலையில், பாடலுக்கேற்ற குத்தாட்டம் போட்டுள்ளார் ஜி.வி. பிரகாஷ்.