publive-image

Advertisment

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகியுள்ள படம் 'விக்ரம்'. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படத்திற்கு திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். இதுவரை இந்தியாவில் மட்டும் 'விக்ரம்' திரைப்படம் ரூ.200 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இதனிடையே கமல்ஹாசன் விக்ரம் படத்தின் வெற்றிக்காக லோகேஷ் கனகராஜுக்கு லெக்சஸ் காரும், உதவி இயக்குநர்கள் 13 பேருக்கு டிவிஎஸ் அப்பாச்சி பைக்கும் பரிசாக அளித்திருந்தார். மேலும் சிறப்பு தோற்றத்தில் நடித்த சூர்யாவிற்கு ரோலக்ஸ் கடிகாரத்தை பரிசளித்தார். இது தொடர்பான புகைப்படங்களை சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து கமல்ஹாசனுக்கு நன்றியும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் காமெடி நடிகர் சதிஷ் நடிகர் சூர்யாவின் பதிவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து, " ஹாய் எஸ். ஆர் பிரபு ப்ரோ. 'கணம்' படத்தில் என் பெயர் ரோல்ஸ் ராய்ஸ் " என எஸ். ஆர் பிரபுவை டேக் செய்து விளையாட்டாக குறிப்பிட்டுள்ளார். இதற்கு பதிலளித்த எஸ்.ஆர் பிரபு, " ரீலீசிற்கு முன்னாடி ஊருல திருவிழா வருது ப்ரோ. அதுல வாங்கி வச்சிடுவோம் " என குறிப்பிட்டுள்ளார். காமெடி நடிகர் சதிஷ், எஸ். ஆர் பிரபு தயாரிப்பில் ஸ்ரீ கார்த்திக் இயக்கத்தில் உருவாகி வரும் 'கணம்' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisment