Skip to main content

தனுஷ் பட இசையமைப்பாளர் இயக்கும் 'முதல் நீ முடிவும் நீ' ... ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு!

Published on 08/01/2022 | Edited on 08/01/2022

 

Mudhal Nee Mudivum Nee film release on zee5

 

'என்னை நோக்கி பாயும் தோட்டா', 'கிடாரி', 'நிமிர்' உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைத்த தர்புகா சிவா முதலும் நீ முடிவும் நீ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமாகவுள்ளார். இளைஞர்களின் உணர்வுகளையும், இன்றைய சிறுவர்களின் மன நிலையை பிரதிபலிக்கும் வகையில் இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. கிஷன் தாஸ், அம்ரிதா மாண்டரின், பூர்வா ரகுநாத் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இப்படத்தை எழுதி இயக்கியத்துடன் தர்புகா சிவா இசையும் அமைத்துள்ளார். கிஷன் தாஸ், அம்ரிதா மாண்ட்ரியா மீத்தா ரகுநாத் ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்தை சமீர் தயாரித்துள்ளார்.

 


'முதல் நீ முடிவும் நீ'படத்தின் அனைத்து பணிகளும் நிறைவடைந்த நிலையில் ஜனவரி 21 ஆம் தேதி  ஜீ 5  ஓடிடி தளத்தில் வெளியாக்கவுள்ளது. இப்படம் வெளியாவதற்கு முன்பே நியூயார்க் திரைப்பட விழாவில் சிறந்த திரைப்படத்திற்கான கௌரவ விருதும்,  மாசிடோனியாவில் நடைபெற்ற ஆர்ட் ஃபிலிம் விருது விழாவில்  இப்படத்தை இயக்கியதற்காக இயக்குநர் தர்புகா சிவாவுக்கு சிறந்த இயக்குநர் விருதும் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தனுஷ் - ஐஸ்வர்யா இருவரும் நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு!

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
dhanush aishwarya divorce case update

தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரும் காதலித்து 18 நவம்பர் 2004ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு யாத்ரா, லிங்கா என இரண்டு ஆண் பிள்ளைகள் இருக்கின்றனர். ஆனால் கடந்த 2022 ஜனவரி 17 அன்று இருவரும் பிரிய முடிவெடுத்துள்ளதாக அறிவித்திருந்தனர். இது திரையுலகில் பரபரப்பையும்,  ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.  

இதையடுத்து இருவரும் அறிவித்தது போல், தனித்தனியே வாழ்ந்து வந்தனர். மேலும் அவரவர் திரை பயணங்களில் கவனம் செலுத்தி வந்தனர். இவர்களது இரு மகன்களும் தனுஷ் பட விழா மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பட விழாவிலும் கலந்து கொண்டனர்.  

இந்தச் சூழலில் கடந்த 8ஆம் தேதி, இருவரும் பரஸ்பரம் விவாகரத்து கோரி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அதில் 2004ல் நடைபெற்ற திருமணம் செல்லாது என அறிவிக்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்திருந்தனர். இந்த மனு சென்னை முதன்மை குடும்பநல நீதிமன்றத்தில் நீதிபதி எஸ்.சுபா தேவி முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரத்த அவர், தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரும் அக்டோபர் 7ஆம் தேதி நேரில் ஆஜராக உத்தரவிட்டு விசாரணையைத் தள்ளிவைத்தார்.

Next Story

நீதிமன்றத்தை நாடிய தனுஷ் - ஐஸ்வர்யா

Published on 08/04/2024 | Edited on 08/04/2024
dhanush aishwarya rajinikanth applied divorce in court

தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரும் காதலித்து 18 நவம்பர் 2004ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு யாத்ரா, லிங்கா என இரண்டு ஆண் பிள்ளைகள் இருக்கின்றனர். ஆனால் கடந்த 2022 ஜனவரி 17 அன்று இருவரும் பிரிய முடிவெடுத்துள்ளதாக அறிவித்திருந்தனர். அதன் படி தனித்தனியே வாழ்ந்து வந்தனர்.

தனுஷ் தற்போது தனது 50 ஆவது படமான ராயன் படத்தை இயக்கி நடித்து முடித்துள்ளார். மேலும் ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ என்ற தலைப்பில் ஒரு படம் இயக்கி வருகிறார். ஹீரோவாக சேகர் கம்முலா இயக்கத்தில் குபேரா, அருண் மாதேஷ்வரன் இயக்கத்தில் இளையராஜா பயோ-பிக், படங்களில் நடித்து வருகிறார். மேலும் மாரி செல்வராஜ் இயக்கத்தில் ஒரு படம், இந்தியில் ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் ஒரு படம் எனக் கைவசம் வைத்துள்ளார். 

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் கடைசியாக லால் சலாம் படத்தை இயக்கினார். கடந்த பிப்ரவரி 9ஆம் தேதி வெளியான இப்படம் கலவையான விமர்சனத்தைப் பெற்றது. இதில் ரஜினி சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார். இப்படத்தை அடுத்து சித்தார்த்தை வைத்து ஒரு படமெடுக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.   

இந்த நிலையில் இருவரும் பரஸ்பரம் விவாகரத்து கோரி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். அதில் 2004ல் நடைபெற்ற திருமணம் செல்லாது என அறிவிக்க வேண்டும் என கோரியுள்ளனர். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.