Mother-in-law who kissed Dhoni; Khushpu elasticity

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வந்த குஷ்பு, 2010 ஆம் ஆண்டில் தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கி தற்போது வரை அதில் தீவிரமாகச்செயல்பட்டு வருகிறார். ஆரம்பத்தில் திமுகவில் இருந்த குஷ்பு பின்பு காங்கிரஸ் கட்சிக்கு மாறினார். இப்போது பாஜகவில் செயல்பட்டு வருகிறார். மேலும் பாஜக தேசிய செயற்குழு உறுப்பினராக இருந்த இவர் அண்மையில் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக பொறுப்பேற்று செயல்பட்டு வருகிறார்.

Advertisment

சமீபத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகத் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார். சமூக வலைத்தள பக்கத்தில் எப்போதும் ஆக்டிவ்வாக இருக்கும் குஷ்பு. சென்னை சூப்பர் கிங்ஸ்அணியின் கேப்டன் தோனியை சந்தித்த புகைப்படத்தை பகிர்ந்திருந்தார்.

Advertisment

அத்தோடு தனது மாமியார் தோனிக்கு முத்தமிட்ட புகைப்படத்தையும் பகிர்ந்தவர், தோனியை பாராட்டி பதிவிட்டிருந்தார். அதில் “ஹீரோக்கள் உருவாக்கப்படவில்லை, அவர்கள் பிறக்கிறார்கள். அதை தோனி நிரூபித்துள்ளார். எங்கள் சிஎஸ்கே தலை தோனியை பாராட்ட வார்த்தைகள் இன்றி இருக்கிறேன். அவர் என் மாமியாரை சந்தித்தார்.அவருக்கு 88 வயது. நல்ல ஆரோக்கியத்தையும், மகிழ்ச்சியையும் அவர்களுடையவாழ்க்கையில் சேர்த்திருக்கிறார். இதற்காக அவருக்கு என் நன்றி” என்று பதிவிட்டுள்ளார்.