Skip to main content

"அவர் எப்போதும் நம் நினைவுகளில் இருப்பார்" - மோகன்லால் இரங்கல்!

Published on 07/07/2021 | Edited on 07/07/2021
bvdbd

 

'தேவதாஸ்', 'கங்கா யமுனா', 'ஆன், தஸ்தான்', 'மொகல்-இ-அஸாம்' உள்ளிட்ட படங்கள் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்த பழம்பெரும் ஹிந்தி நடிகர் திலீப்குமார் வயது மூப்பு காரணாமாக காலமானார். அவருக்கு வயது 98. நடிகர் திலீப் குமார் மூச்சுத்திணறல் காரணமாக கடந்த மாதம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மும்பையில் உள்ள ஹிந்துஜா மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார். தொடர்ந்து அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவந்த நிலையில், இன்று (07.07.2021) காலை 7.30 மணியளவில் சிகிச்சைப் பலனின்றி திலீப் குமார் காலமானார். 

 

இவரது மறைவுக்குத் திரைப் பிரபலங்கள் பலரும் சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்துவருகின்ற நிலையில், மலையாள சூப்பர்ஸ்டார் நடிகர் மோகன்லால் இரங்கல் தெரிவித்து ட்வீட் செய்துள்ளார். அதில்.. "நடிகர் திலீப் குமார் இந்திய சினிமாவின் மூத்த உறுப்பினர் ஆவார். அவர் எப்போதும் நம் நினைவுகளில் இருப்பார். அவரது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல். இந்த லெஜெண்ட்டின் ஆன்மா நித்திய அமைதி பெறட்டும்" என பதிவிட்டுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“நேர்மையான அரசியல்வாதி” - விஜயகாந்த் குறித்து மோகன்லால்

Published on 28/12/2023 | Edited on 28/12/2023
mohanlal about vijayakanth

நடிகரும் தேமுதிக நிறுவனத் தலைவரும், முன்னாள் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான, விஜயகாந்த் உடல் நலக்குறைவு காரணமாகச் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். விஜயகாந்தின் மருத்துவ பரிசோதனையில், அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. மூச்சு விடுவதில் சிரமம் இருப்பதால் வெண்டிலேட்டர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், விஜயகாந்த் இன்று (28-12-23) காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் எனப் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். 

இவரது மறைவு தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது உடல் சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அங்கு தொண்டர்கள், ரசிகர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கூட்டம் கூட்டமாக வந்து அஞ்சலி செலுத்தி வந்தனர். இதையடுத்து அவரது உடல் தேமுதிக அலுவலகத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அவரது உடலுக்கு முழு அரசு மரியாதை செய்யப்படும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். நாளை மாலை 4.45 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படுகிறது. 

இந்த நிலையில் மம்மூட்டி, “விஜயகாந்த் நம்மோடு இல்லை. அவர் எனக்கு நல்ல நண்பர், சிறந்த நடிகர், அற்புதமான மனிதர். அவரது இழப்பு திரையுலகினர், திரையுலக ஆர்வலர்கள் மற்றும் தனிப்பட்ட முறையில் எனக்கும் மிக வருத்தமான ஒன்று. அவரது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள்” என எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். 

மோகன்லால், “சிறந்த நடிகரும், நேர்மையான அரசியல்வாதியும், கனிவான மனிதருமான விஜயகாந்த் ஆத்மா சாந்தியடையட்டும். அவரது இழப்பின் வலியைப் பகிர்ந்து கொள்ளும் அவரது குடும்பத்தினர், நண்பர்கள், ரசிகர்கள் மற்றும் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்” என எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 

Next Story

சிவகார்த்திகேயன் படத்தில் மோகன்லால்

Published on 18/11/2023 | Edited on 18/11/2023

 

mohanlal to act in sivakarthikeyan movie under ar murugadoss direction

 

'மாவீரன்' படத்தைத் தொடர்ந்து, கமல் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் பெயரிடப்படாத படத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். சாய் பல்லவி கதாநாயகியாக நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இதனிடையே ரவிகுமார் இயக்கத்தில் ‘அயலான்’ படத்தில் அவர் நடித்துள்ள நிலையில் 2024 பொங்கலை முன்னிட்டு இப்படம் வெளியாகவுள்ளது. 

 

இதையடுத்து ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் தனது 23வது படத்திற்காக கை கோர்த்துள்ளார். இப்படத்தின் ஆரம்பக் கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக மிருணாள் தாக்கூர் நடிக்கவுள்ளதாகவும் அதற்கான டெஸ்ட்  ஷூட் சமீபத்தில் நடந்து முடிந்துள்ளதாகவும் தகவல் வெளியானது.

 

இந்த நிலையில் இப்படத்தில் மலையாள முன்னணி நடிகர் மோகன்லால் நடிக்க வாய்ப்புள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. முக்கிய கதாபாத்திரத்தில் அவரை நடிக்க வைக்க, பேச்சு வார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது. மேலும் வில்லனாகத் துப்பாக்கி படத்தில் மிரட்டிய வித்யுத் ஜாம்வால் நடிக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. அதோடு பான் இந்திய படமாக இப்படம் உருவாகவுள்ளதாக திரை வட்டாரங்கள் தெரிவிகின்றன.