மலையாள திரையுலகின் முன்னணி நடிகர் மோகன்லால் முதன்முறையாக இயக்கி நடித்திருக்கும் திரைப்படம் பரோஸ். ஆண்டனி பெரும்பாவூர் தயாரிக்கும் இப்படம் 3டியில் ஃபேண்டஸி திரைப்படமாக
வரும் டிசம்பர் 25 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது. ரவிஸ் டாக்டர்.பி.ரவி பிள்ளை வழங்கும் இப்படம், மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என ஐந்து மொழிகளில் வெளியாகிறது.
இப்படத்திற்கு 'டீப் ப்ளூ சீ 3', 'ஐ இன் தி ஸ்கை' மற்றும் 'பிட்ச் பெர்பெக்ட்' ஆகிய திரைப்படங்களில் பணியாற்றிய பிரபல ஹாலிவுட் இசையமைப்பாளர் மார்க் கிலியான், ரீ-ரிக்கார்டிங் செய்துள்ளார். இளம் வயதிலேயே உலகப் புகழ்பெற்ற, லிடியன் நாதஸ்வரம் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
இந்த நிலையில் இப்படத்தின் ட்ரைலர் அப்டேட் வெளியாகியுள்ளது. படத்தின் தமிழ் டிரெய்லர் வரும் டிசம்பர் 15 ஆம் தேதி வெளியாகவுள்ளது. ஆண்டனி பெரும்பாவூர், மோகன்லால் கூட்டணியில் இதுவரை 28 படங்களுக்கு மேல் வெளியாகி அதில் பல படங்கள் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதையடுத்து மீண்டும் இந்ப்படம் மூலம் இணைந்துள்ளதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.