Skip to main content

கௌதம் இயக்குவதாக இருந்த படத்தை மோகன்ராஜா இயக்குகிறாரா?

Published on 21/01/2020 | Edited on 21/01/2020

கடந்த 2018ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் உலகம் முழுவதும் வெளியான ஹிந்தி படம் அந்தாதுன். இது அந்த வருடத்தின் ப்ளாக்பஸ்டர் ஹிட் படங்களில் ஒன்றாக அமைந்தது. ஆயுஷ்மான் குரானா, தபு, ராதிகா ஆப்தே நடிப்பில் உருவான அந்தாதுன் படத்தை ஸ்ரீராம் ராகவன் இயக்கினார்.
 

mohan raja

 

 

இந்த படத்தின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து தமிழில் இதை ரீமேக் செய்ய பலரும் ஆர்வம் காட்டினார்கள். குறிப்பாக சித்தார்த், தனுஷ் உள்ளிட்ட நடிகர்கள் அந்தாதுன் படத்தின் ரீமேக் உரிமத்தை பெற முயற்சித்தார்கள் என அப்போது தகவல் வெளியானது.

'தி பியானோ டியூனர்' என்ற பிரஞ்சு ஷார்ட் ஃப்லிமை தழுவி எடுக்கப்பட்ட அந்தாதுன் படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை நடிகர் பிரசாந்த் கைப்பற்றினார். இதில் ஆயுஷ்மான் குரானாவாக பிரசாந்த் நடிக்கிறார். முதலில் இந்த படத்தை கௌதம் மேனன் இயக்கப்போவதாக சொல்லப்பட்டு வந்தது. 

இந்நிலையில் கௌதம் மேனன் இதிலிருந்து விலகிக்கொள்ள தற்போது மோகன் ராஜா ரீமேக் செய்ய பிரசாந்த் திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என்று சொல்லப்படுகிறது. 
 

சார்ந்த செய்திகள்

Next Story

வி.சி.க. தலைவர் திருமாவளவனுடன் பிரஷாந்த் திடீர் சந்திப்பு

Published on 02/03/2024 | Edited on 02/03/2024
prashanth meets thirumavalavan

பிரஷாந்த், தற்போது விஜய் - வெங்கட் பிரபு கூட்டணியில் உருவாகி வரும்  ‘தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம்’ படத்தில் நடித்து வருகிறார். மேலும் அந்தகன் படத்தை கைவசம் வைத்துள்ளார். நீண்ட காலமாக உருவாகி வரும் படம் விரைவில் வெளியிடவுள்ளதாக சமீபத்திய செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியிருந்தார். 

சமீப காலமாக பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார். அன்மையில் கூட நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை பகுதியில் ஹெல்மெட் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு இலவசமாக ஹெல்மெட் வழங்கினார்.

இந்த நிலையில், பிரஷாந்த் தனது தந்தை தியாகராஜனுடன் இணைந்து விசிக தலைவர் திருமாவளவன் எம்.பி-யை சந்தித்துள்ளார். 

Next Story

“அதுக்கு நிறைய தைரியம் வேண்டும்” - விஜய் குறித்து பிரசாந்த்

Published on 26/02/2024 | Edited on 26/02/2024
prashanth about vijay

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை பகுதியில் ஹெல்மெட் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பிரசாந்த் கலந்து கொண்டார். அதில் பொதுமக்களுக்கு இலவசமாக ஹெல்மெட் வழங்கினார். இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், அவர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார். 

அவர் பேசுகையில், “தலைக்கவசம் உயிர்க்கவசம் என்பார்கள். என்னை பொறுத்தவரை அது உயிரைத் தாண்டி ஒரு குடும்பத்தை காக்கும் கவசம். இன்றைக்கு நடக்கும் நிறைய விபத்துகளில் உயிர் பலியாவது தலைக்கவசம் அணியாதது தான் காரணம் என புள்ளி விவரங்கள் சொல்கின்றன. அதனால் மக்களுக்கு தலைக்கவசம் வழங்கி வருகிறேன். அதன் மூலம் ஒருத்தர் உயிர் காப்பாற்றப்பட்டாலும் எனக்கு பெருமைதான்” என்றார்.  

அடுத்தடுத்த படங்கள் குறித்துப் பேசிய அவர், “அந்தணன் படம் முடிந்துவிட்டது. விரைவில் ரிலீஸாகும். அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. விஜய் சாருடன் சேர்ந்து ஒரு படம் நடிச்சிட்டு இருக்கேன். இன்னும் இரண்டு மூன்று புது ப்ராஜெக்ட் வந்திருக்கு. அதிலும் நடிக்க போறேன். விஜய்யுடன் நடிக்கும் படம் சூப்பரா போயிட்டு இருக்கு. உங்க எதிர்பார்ப்புக்கு மேல் அந்த படம் இருக்கும்” என்றார். 

மேலும், விஜய்யின் அரசியல் வருகை குறித்து பேசிய அவர், “விஜய்யை என்னுடைய சகோதரர் என்று கூட சொல்லலாம். மக்களுக்கு சேவை செய்யும் பணி உண்மையிலே உழைப்பும், கடமைகளும் நிறைந்தது. அது விஜய் சார்கிட்ட இருக்கு. அதை நான் வாழ்த்துகிறேன்.  எனக்கு அது ரொம்ப கஷ்டம். அதுக்கு நிறைய தைரியம் வேண்டும். அவர் இறங்கியிருக்கிறார், வாழ்த்துகள்” என்றார்.