Skip to main content

''உங்களைப் போல ஒருவரிடமிருந்து இந்த வார்த்தைகள் வருவது நிறைவைத் தருகிறது'' - மோகன் லால் நெகிழ்ச்சி!

Published on 22/05/2020 | Edited on 22/05/2020

 

da

 

'லாலேட்டன்' என்று அன்போடு அனைவராலும் அழைக்கப்படும் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன் லால் நேற்று தனது 60 ஆவது பிறந்தநாளை கொண்டாடினார். இவருக்குத் திரைத்துறையைச் சார்ந்த பல்வேறு பிரபலங்கள் வாழ்த்துத் தெரிவித்த நிலையில் உலக நாயகன் கமல்ஹாசனும் ''அன்பிற்குரிய மோகன்லால்... உங்களை உங்கள் முதல் படத்திலிருந்தே எனக்குப் பிடிக்கும். ஒவ்வொரு திருப்பத்திலும் நம்மைத் தரம் தாழ்த்துபவர்கள் மறைந்திருக்கும் இந்தப் பயணத்தில், உங்களது தொடர்ச்சியான தரமான பணியைப் பார்த்து நான் பொறாமை கொள்கிறேன். நாம் இணைந்து பணிபுரிந்தபோது, இன்னும் கூடுதலாக உங்களைப் பிடித்தது. எனது இளைய சகோதரர் போன்று நீங்கள் நெடுங்காலம் வாழ வேண்டும்'' என ட்விட்டரில் வாழ்த்துத் தெரிவித்தார். 
 

 

இந்நிலையில் கமலின் வாழ்த்துக்கு நன்றி கூறி ட்விட்டரில் மோகன் லால் பதிவிட்டுள்ளார். அதில்.... "அன்பார்ந்த கமல் அவர்களே, உங்கள் கனிவான வார்த்தைக்கு நான் என்றும் நன்றியுடன் இருப்பேன். உங்களைப் போன்ற ஒரு அற்புதமான நடிகர், நிகரற்ற அர்ப்பணிப்பு மற்றும் திறமை கொண்டவரிடமிருந்து இந்த வார்த்தைகள் வருவது நிறைவைத் தருகிறது. இது எனது பயணத்தில் முன்னே செல்ல இன்னும் என்னை ஊக்கப்படுத்தும். நன்றி. கடவுள் உங்களை ஆசிர்வதிக்கட்டும்" எனக் கூறியுள்ளார். மேலும் தனக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள் சொன்ன மற்ற திரை நட்சத்திரங்களுக்கும் அவர் நன்றி தெரிவித்து வருகிறார்.


 

சார்ந்த செய்திகள்

Next Story

நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஒன்றிணைந்த மோகன் லால் - ஷோபனா ஜோடி

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
mohanlal shobana at shooting spot of l 360

மலையாள முன்னணி நடிகர் மோகன் லால், கடைசியாக லிஜோ ஜோஸ் பெல்லிசேரி இயக்கத்தில் மலைக்கோட்டை வாலிபன் படத்தில் நடித்திருந்தார். இப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றது. இப்படத்தை அடுத்து பிரித்விராஜ் இயக்கத்தில் ‘எல்.2 - எம்புரான்’ படத்தில் நடித்து வருகிறார். மேலும் சில படங்களை கைவசம் வைத்துள்ளார். 

இந்த நிலையில் மோகன்லாலின் 360ஆவது படம், தற்காலிகமாக எல்360 என்ற தலைப்பில் உருவாகி வருகிறது. இப்படத்தை தருண் மூர்த்தி இயக்க ஷோபனா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்தின் மூலம் 15 வருடங்களுக்கு பிறகு மோகன் லால் - ஷோபனா இருவரும் இணைந்து நடிக்கின்றனர். இதற்கு முன்னால் 55 முறை இருவரும் இணைந்து நடித்துள்ளனர். அந்த அளவுக்கு இவர்களின் ஜோடி ரசிகர்களால் பெரிதும் வரவேற்கப்பட்டது . 

இந்தச் சூழலில் இப்படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியுள்ளது. படப்பிடிப்பு தளத்தில் மோகன்லாலும், ஷோபனாவும் நீண்ட இடைவெளிக்குப் பிறகு சந்தித்துள்ளனர். இது தொடர்பான புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

Next Story

மோகன்லாலுடன் இணையும் கமல்ஹாசன்

Published on 27/12/2022 | Edited on 27/12/2022

 

kamal hassan to join in mohanlal movie

 

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘இந்தியன் 2’. லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் கதாநாயகியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். இப்படத்தின் 60 சதவீத படப்பிடிப்புகள் நிறைவடைந்த நிலையில் பல்வேறு காரணங்களால் நிறுத்தப்பட்டிருந்தது. இதையடுத்து சமீபத்தில் மீண்டும் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வருகிறது. 

 

'இந்தியன் 2' படத்தைத் தொடர்ந்து மணிரத்னம் இயக்கத்தில் ஒரு படமும், மகேஷ் நாராயணன் இயக்கத்தில் ஒரு படமும் நடிக்கவுள்ளார்.  இதனிடையே ஹெச்.வினோத் இயக்கத்தில் ஒரு படம் நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. 

 

இந்நிலையில் மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் உருவாகும் 'மலைக்கோட்டை வாலிபன்' படத்தில் கமல்ஹாசன் நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக கமலிடம் படக்குழு பேச்சு வார்த்தை நடத்தியதாகவும், முக்கிய கதாபாத்திரத்தில் கமல் நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இப்படத்தின் ப்ரீ புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருவதாகவும் அடுத்த மாதம் படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். 

 

இந்த தகவல் உறுதியாகும் பட்சத்தில் 13 ஆண்டுகள் கழித்து கமலும் மோகன்லாலும் இணைந்து நடிக்கவுள்ளனர். முன்னதாக 'உன்னைப்போல் ஒருவன்' படத்தில் இணைந்து நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.