மனு ஆனந்த் இயக்கத்தில் விஷ்ணு விஷால் இயக்கத்தில் வெளியான 'எஃப்.ஐ.ஆர் திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இப்படத்தை தொடர்ந்து நடிகர் விஷ்ணு விஷால்'களவு' படத்தை இயக்கிய முரளி கார்த்திக் இயக்கும் மோகன் தாஸ் படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தில் கதாநாயகியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ளார். உண்மை கதையை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளஇப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தநிலையில் இறுதிக்கட்ட பணியில் படக்குழு தீவிரம் காட்டி வருகிறது.
இந்நிலையில் இப்படத்தின் டீசர் குறித்தஅறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, 'மோகன் தாஸ்' படத்தின் டீசர் நாளை(16.3.2022) வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தை தொடர்ந்து நடிகர் விஷ்ணு விஷால் பிரபல தெலுங்கு நடிகர் ரவி தேஜாவுடன் இணைந்துநடிக்க உள்ளதுகுறிப்பிடத்தக்கது.