Skip to main content

"வலிமை அப்டேட் சம்பவம் இன்னும் நினைவில் உள்ளது..." - மொயின் அலி பேட்டி!

Published on 28/09/2021 | Edited on 28/09/2021

 

Moeen Ali

 

இங்கிலாந்தைச் சேர்ந்த ஆல்ரவுண்டர் மொயின் அலி, டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக நேற்று அறிவித்தார். அதே நேரத்தில், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் தொடர்ந்து விளையாட உள்ளார். நடப்பு ஐபிஎல் தொடரில் மொயின் அலி சென்னை அணிக்காக விளையாடிவரும் நிலையில், தன்னுடைய டெஸ்ட் போட்டி அனுபவங்கள் குறித்து மொயின் அலி பேசிய சிறிய காணொளியைச் சென்னை அணி நிர்வாகம் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. 1 நிமிடங்கள் 12 நொடிகள் கொண்ட அந்த காணொளியில் இங்கிலாந்து டெஸ்ட் அணிக்காக விளையாடியது, தன்னுடைய சிறந்த டெஸ்ட் இன்னிங்ஸ், சேப்பாக்கம் மைதானத்தில் இந்தியாவிற்கு எதிராக விளையாடியது மற்றும் தன்னுடைய ஓய்வு அறிவிப்பு குறித்து அவர் சுருக்கமாகப் பேசியுள்ளார்.

 

அதில், சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் விளையாடியது குறித்து கூறுகையில், "போட்டியின்போது தொடர்ந்து வலிமை அப்டேட் கேட்டது இன்னும் தனக்கு நினைவில் இருப்பதாகத் தெரிவித்தார். மொயின் அலி பேசிய இந்தக் காணொளி தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது. 

 

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இந்தாண்டின் தொடக்கத்தில் நடைபெற்ற இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டியின்போது  ஃபீல்டிங்கில் நின்ற மொயின் அலியிடம் அஜித் ரசிகர்கள் சிலர் வலிமை அப்டேட் கேட்டது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அஜித் படக்குழு மீது கமிஷனர் அலுவலகத்தில் புகார்

Published on 11/02/2023 | Edited on 11/02/2023

 

Complaint against Ajith's valimai film crew in the commissioner's office

 

இயக்குநர் அ.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் நடிப்பில் கடந்த வருடம் வெளியான படம் 'வலிமை'. அப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக ஹியூமா குரேஷி நடிக்க, வில்லன் கதாபாத்திரத்தில் கார்த்திகேயா நடித்திருந்தார். இப்படத்தை போனி கபூர் தயாரித்திருந்தார். இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும், வசூல் ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்று 200 கோடிக்கு மேல் வசூலித்தது. 

 

இப்படம் வெளியாகி ஒரு வருடத்தை கடக்கவுள்ள நிலையில், ராஜேஷ் ராஜா என்ற குறும்பட இயக்குநர், ‘வலிமை’ படக்குழு மீது சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார். வலிமை படத்தில் இடம்பெற்ற சில காட்சிகள், 2019 ஆம் ஆண்டு அவர் இயக்கத்தில் வெளியான 'தங்க சங்கிலி' என்ற குறும்படத்தில் இடம்பெற்ற 10 காட்சிகள் போல் உள்ளதாகக் கூறியுள்ளார்.  

 

மேலும், ராஜேஷ் ராஜா இதற்கு முன்பு அ.வினோத்தை சந்திக்க பலமுறை முயற்சித்தும், அவரை சந்திக்க முடியவில்லை என்று கூறப்படுகிறது. அதனால் தனது பிரச்சினைக்கு தீர்வு காண இறுதியாக போலீஸ் கமிஷனர் அலுவலகத்தை அணுகியுள்ளதாகச் சொல்லப்படுகிறது. 

 

 

Next Story

வலிமை பட விவகாரம்; 5 மாதத்திற்கு பிறகு நடந்த அதிரடி கைது

Published on 06/08/2022 | Edited on 06/08/2022

 

police arrested the person who threw petrol bomb screening valimai theatre

 

இயக்குநர் எச். வினோத் - அஜித் கூட்டணியில் மூன்றாவது முறையாக உருவாகி வரும் படம் 'ஏகே 61'. போனி கபூர் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. 

 

ad

 

இதனிடையே கடந்த பிப்ரவரி மாதம் அஜித் நடித்த வலிமை படம் உலகம் முழுவதும் திரையரங்கில் வெளியானது. கிட்டத்தட்ட 3 ஆண்டுகள் கழித்து வெளியான அஜித் படம் என்பதால், அவரது ரசிகர்கள் பட்டாசு வெடித்தும் கட்டவுட்டிற்கு பால் ஊற்றியும் திரையரங்கில் வலிமையை கொண்டாடி  தீர்த்தனர்.  அந்த நேரத்தில் கோவை, காந்திபுரம் 100 அடி சாலையில் வலிமை படம் ஓடிக்கொண்டிருந்த கங்கா யமுனா திரையரங்கு மீது இருசக்கரத்தில் வந்த மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டை வீசிவிட்டு தப்பித்துச் சென்றனர். இது அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.  இது தொடர்பாக கோவை காட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பித்துச் சென்றவரை தேடி வந்தனர். 

 

இந்நிலையில் இச்சம்பவத்திற்கு காரணமான சிவா என்பவரை 5 மாதம் கழித்து காட்டூர் போலீசார் சென்னையில் வைத்து கைது செய்துள்ளனர். சிவா சென்னை வடபழனியில் தங்கி கட்டிட வேலை பார்த்து வருவதாக போலீசாருக்குத் தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து சென்னை விரைந்த காட்டூர் போலீஸ் வடபழனி போலீசாரின் உதவியுடன் சிவாவை கைது செய்து கோவைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.