/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/2115.jpg)
இலங்கையை பூர்வீகமாக கொண்ட போண்டாமணி கடந்த 1991 ஆம்ஆண்டு பாக்யராஜ் நடிப்பில் வெளியான பவுன் பவுன்தான் என்ற படத்தின் மூலம் சினிமாத்துறையில் அறிமுகமானார். அதன்பிறகு தொடர்ச்சியாக திரைப்படங்களில் காமெடி கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். தற்போது சில படங்களிலும், சில தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து வரும் போண்டாமணி கடந்த மாதம் இதய கோளாறு காரணமாக சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நடிகர் போண்டாமணியை மக்கள் நல்வாழ்வுத்துறைஅமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் சென்று சந்தித்து உடல்நலம் விசாரித்துள்ளார். நேற்று சக நடிகரான பெஞ்சமின், போண்டாமணிக்கு இரண்டு சிறுநீரகமும் செயல் இழந்துவிட்டதாக கூறி கண்ணீர் மல்க வீடியோ வெளியிட்டிருந்தார். மேலும் அந்த வீடியோவில், யாராவது போண்டாமணிக்குஉதவி செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்த நிலையில் இன்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் சென்று நலம் விசாரித்துள்ளதுகுறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)