Skip to main content

"நான் மனுஷனாகவே இருக்கேன்" - மிரட்டல் லுக்கில் விஜய் சேதுபதி

Published on 21/10/2022 | Edited on 21/10/2022

 

Michael teaser starring Sundeep Kishan, Vijay Sethupathi is trending in you tube

 

தெலுங்கில் வளர்ந்து வரும் ஹீரோவாக இருக்கும் சந்தீப் கிஷன் தமிழில் 'யாருடா மகேஷ்', 'மாநகரம்' படங்களின் மூலம் பிரபலமானார். இவர் 'கசட தபற' படத்தைத் தொடர்ந்து ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கும் 'மைக்கேல்' படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் கவுதம் மேனன், வரலக்ஷ்மி சரத்குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். விஜய் சேதுபதி சிறப்புத் தோற்றத்தில் நடிக்கிறார். லோகேஷ் கனகராஜ் வழங்கி 'ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ்' தயாரிக்கும் இப்படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைக்கிறார். 

 

இந்நிலையில் 'மைக்கேல்' படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.  மேலும் டீசரில் இடம்பெறும், '‘மைக்கேல், வேட்டையாட தெரியாத மிருகத்த மத்த மிருகங்கள் வேட்டையாடிடும் மைக்கேல் ” என்ற வசனத்திற்கு “துரத்துற பசியிலிருக்குற மிருகத்துக்கு வேட்டை தெரியனும்னு அவசியமில்ல மாஸ்டர்” என்று சந்தீப் கிஷன் பேசும் வசனமும் டீசர் இறுதியில், "மைக்கேல், மன்னிக்கும் போது நாம கடவுள் ஆகுறோம்", அதற்கு "நான் மனுஷனாகவே இருக்கேன் மாஸ்டர், கடவுள் ஆக வேணாம்" என்று இடம் பெரும் வசனமும் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.  

 

மேலும் டீசரில் வரும் விஜய் சேதுபதி லுக் மிரட்டலாக உள்ளது. இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது. 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வெற்றிமாறன் பட அப்டேட்டை வெளியிடும் விஜய் சேதுபதி 

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
vetrimaaran movie manushi trailer will released by vijay sehtupathi

வெற்றிமாறன் தற்போது விடுதலை இரண்டாம் பாகத்தை இயக்கி வருகிறார். படத்தின் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இதனிடையே கிராஸ் ரூட் ஃபிலிம்ஸ் என்ற நிறுவனத்தையும் நடத்தி வரும் வெற்றிமாறன், உதயம் என்.எச்.4, பொறியாளன், கொடி, லென்ஸ், அண்ணனுக்கு ஜே உள்ளிட்ட பல்வேறு படங்களைத் தயாரித்துள்ளார். கடைசியாக ஆண்ட்ரியா ஜெர்மியா நடிப்பில் 2022ஆம் ஆண்டு வெளியான 'அனல் மேலே பனித்துளி' படத்தை தயாரித்திருந்தார். 

இப்போது சூரி ஹீரோவக நடிக்கும் கருடன் படத்தை தயாரித்து வருகிறார். இப்படத்தின் மொத்த படப்பிடிப்பும் முடிந்து போஸ்ட் புரொடெக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. இதனிடையே அறம் பட இயக்குநர் கோபி நயினார் இயக்கத்தில் ஆன்ரியா நடிப்பில் மனுசி என்ற தலைப்பில் ஒரு படத்தை தயாரித்து வருகிறார். இளையராஜா இப்படத்திற்கு இசையமைக்கும் நிலையில் கடந்த 2022ஆம் ஆண்டு ஆன்ட்ரியாவின் பிறந்தநாளில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டது. சூர்யா இதனை வெளியிட்டிருந்தார். 

vetrimaaran movie manushi trailer will released by vijay sehtupathi

இதையடுத்து இப்படத்தை பற்றி எந்த அப்டேட்டும் வராத நிலையில் தற்போது இப்படத்தின் ட்ரைலர் அப்டேட் வெளியாகியுள்ளது. நாளை மாலை 6 மணிக்கு வெளியாகிறது. விஜய் சேதுபதி ட்ரைலரை வெளியிடுகிறார். கோபி நயினாரும் வெற்றிமாறனும் ஒரு படத்தில் இணைந்துள்ளதாலும் ஆன்ட்ரியா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாலும் இப்படத்தின் மீதான் எதிர்பார்ப்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகமாக இருக்கிறது.

Next Story

14 வருடங்கள் நிறைவு செய்தது குறித்து சந்தீப் கிஷன்

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
sundeep kishen about his complete 14 years in cinema

தெலுங்கில் வளர்ந்து வரும் ஹீரோவாக இருப்பவர் 'சந்தீப் கிஷன்'. தமிழில் 'யாருடா மகேஷ்' படத்தில் அறிமுகமாகி 'மாநகரம்' படத்தின் மூலம் பிரபலமானார். தொடர்ந்து 'நெஞ்சில் துணிவிருந்தால்', 'மாயவன்', கசடதபற ஆகிய படங்களில் நடித்திருந்தார். மேலும் தனுஷ் நடிப்பில் கடந்த பொங்கலை முன்னிட்டு வெளியான கேப்டன் மில்லர் படத்திலும் நடித்திருந்தார். அடுத்ததாக தனுஷ் இயக்கி நடித்திருக்கும் ராயன் படத்தில் நடித்திருக்கிறார். தனுஷிற்கு தம்பி கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக கூறப்படுகிரது. இப்படம் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. 

இந்த நிலையில் இவர் நடித்த முதல் படமான பிரஸ்தானம் என்ற தெலுங்கு படம் இன்றுடன் வெளியாகி 14 ஆண்டுகளைக் கடக்கிறது. இதன் மூலம் திரைத்துறைக்கு அவர் அறிமுகமாகி 14 ஆண்டுகளை நிறைவுசெய்கிறார். இந்த நிலையில் 14 ஆண்டுகளை நிறைவு செய்தது குறித்து பகிர்ந்துள்ளார். 

இது தொடர்பாக அவரின் எக்ஸ் தள பதிவில், “இந்த 14 வருடங்களாக நண்பர்களாக, குடும்பமாக மற்றும் ரசிகர்களாக என்னுடன் அன்புடனும், வலிமையுடனும் இருந்ததற்கு நன்றி. நான் விழும்போதெல்லாம், நீங்கள் என்னை மீண்டும் மேலே எழச்செய்தீர்கள். நான் உங்களுக்கு என் வாழ்நாளில் கடமைப்பட்டிருக்கிறேன், மற்றும் உங்கள் அனைவரையும் மிகவும் பெருமைப்படுத்துவேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.