/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/16_46.jpg)
தெலுங்கில் வளர்ந்து வரும் ஹீரோவாக இருக்கும் சந்தீப் கிஷன் தமிழில் 'யாருடா மகேஷ்', 'மாநகரம்' படங்களின் மூலம் பிரபலமானார். இவர் 'கசட தபற' படத்தைத் தொடர்ந்து ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கும் 'மைக்கேல்' படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் கவுதம் மேனன், வரலக்ஷ்மி சரத்குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். விஜய் சேதுபதி சிறப்புத் தோற்றத்தில் நடிக்கிறார். லோகேஷ் கனகராஜ் வழங்கி 'ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ்' தயாரிக்கும் இப்படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைக்கிறார்.
இந்நிலையில் 'மைக்கேல்' படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. மேலும் டீசரில் இடம்பெறும், '‘மைக்கேல், வேட்டையாட தெரியாத மிருகத்த மத்த மிருகங்கள் வேட்டையாடிடும் மைக்கேல் ” என்ற வசனத்திற்கு “துரத்துற பசியிலிருக்குற மிருகத்துக்கு வேட்டை தெரியனும்னு அவசியமில்ல மாஸ்டர்” என்று சந்தீப் கிஷன் பேசும் வசனமும் டீசர் இறுதியில், "மைக்கேல், மன்னிக்கும் போது நாம கடவுள் ஆகுறோம்", அதற்கு "நான் மனுஷனாகவே இருக்கேன் மாஸ்டர், கடவுள் ஆக வேணாம்" என்று இடம் பெரும் வசனமும் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
மேலும் டீசரில் வரும் விஜய் சேதுபதி லுக் மிரட்டலாக உள்ளது. இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)