/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/104_24.jpg)
'மாஸ்டர் ஃபீஸ்' என்ற தலைப்பில் நித்யா மேனன் மற்றும் ஷரஃப் யு தீன் உள்ளிட்ட பலர் நடிப்பில் ஒரு வெப் தொடர் உருவாகி வருகிறது. இதில் ரெஞ்சி பணிக்கர், மாலா பார்வதி, அசோகன் மற்றும் சாந்தி கிருஷ்ணா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த தொடர் மலையாளம், தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், பெங்காலி மற்றும் மராத்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாகிறது.
நகைச்சுவை கலந்த குடும்ப கதையாக உருவாகி வரும் இத்தொடரை ஸ்ரீஜித் இயக்க மேத்யூ ஜார்ஜ் தயாரிக்கிறார். இத்தொடரின் டீசர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. அதில் விரைவில் வெளியாகவுள்ளதாகப் படக்குழு குறிப்பிட்டுள்ள நிலையில் விரைவில் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)