/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/434_5.jpg)
1990களில் தொலைக்காட்சி தொடர்களாக வெளியான மர்ம தேசம், ஜீ பூம்பா, விடாது கருப்பு தொடர்கள் குழந்தைகள் மத்தியில் நல்ல வரவேற்பைபெற்றிருந்தது. இந்த தொடர்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துப் பிரபலமானவர் லோகேஷ் ராஜேந்திரன். மர்மதேசம் தொடர் வெளியாகி 25 ஆண்டுகள் ஆனதையொட்டி சமீபத்தில் அதற்கான கொண்டாட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. இது தொடர்பான புகைப்படங்களும் சமூக வலைத்தளங்களில் வெளியானது. இப்புகைப்படத்தில் குட்டி ராசுவாக நடித்துப் பிரபலமான லோகேஷ் ராஜேந்திரன் இளைஞராக வளர்த்திருந்ததைப் பார்த்து பலரும் ஆச்சரியப்பட்டனர்.
சின்னதிரையில் குழந்தை நட்சத்திரமாகப் பிரபலமான லோகேஷ், நடிப்பை விட்டுவிட்டு இயக்கம், எடிட்டிங் என தொழில் நுட்ப வேலைகளில் கவனம் செலுத்தி வந்ததாகக் கூறப்படுகிறது. இவர் இயக்கிய குறும்படங்கள் சமூக வலைத்தளத்தில் வெளியாகி பலரின் பாராட்டைப் பெற்றது. இந்நிலையில் லோகேஷ் ராஜேந்திரன் தற்கொலை செய்துகொண்டுள்ளார். இவரது தற்கொலை திரையுலகினர் மற்றும் அவர்களது நண்பர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த தற்கொலை தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)