Skip to main content

"மனிதநேயம் மிக்க செயல்" - மார்கழி திங்கள் படக்குழுவுக்கு அமைச்சர் மா.சுப்ரமணியன் பாராட்டு

Published on 30/09/2023 | Edited on 30/09/2023

 

Margazhi Thingal team donate body parts

 

இயக்குநர் பாரதிராஜாவின் மகன் மனோஜ் இயக்குநராக அறிமுகமாகவுள்ள படம் 'மார்கழி திங்கள்'. இப்படத்தை இயக்குநர் சுசீந்திரன் தயாரிக்க, பாரதிராஜா முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சுசீந்திரனும் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். முதன்மை கதாபாத்திரத்தில் அறிமுக கலைஞர்கள் சியாம் செல்வன், ரக்ஷனா நடித்துள்ளனர். இளையராஜா இசைப் பணிகளை மேற்கொள்கிறார். 

 

படத்தின் டீசர், ட்ரைலர் ஆகியவை வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. ட்ரைலரில் விரைவில் படம் ரிலீஸாகவுள்ளதாக படக்குழு குறிப்பிட்ட நிலையில் விரைவில் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

 

இந்த நிலையில் இந்த படக்குழுவைச் சேர்ந்த சுசீந்திரன், மனோஜ் பாரதிராஜா, நாயகன் சியாம் செல்வன், நாயகிகள் நக்‌ஷா சரண், ரக்‌ஷனா உள்ளிட்ட 16 பேர் உடல் உறுப்புகளை தானம் செய்யவுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவரது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும் தானம் செய்வதற்குரிய படிவங்களை இன்று காலை அவரிடம் ஒப்படைத்ததாகவும் மனிதநேயம் மிக்க அவர்களுடைய இச்செயல் மற்றவர்களுக்கு முன்னுதாரணமானதாக இருக்கும் என்றும் பாராட்டியுள்ளார்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“திரைப்படங்கள் சமூகத்தில் அழுத்தமான தாக்கத்தை ஏற்படுத்தும்” - விஷ்ணு விஷால்

Published on 29/01/2024 | Edited on 29/01/2024
vishnu vishal about his career and 15 years of  Vennila Kabadi Kuzhu

சுசீந்திரன் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடிப்பில் கடந்த 2009 ஆம் ஆண்டு வெளியான படம் வெண்ணிலா கபடி குழு. இதில் சரண்யா மோகன், கிஷோர், சூரி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இமேஜின் கிரியேஷன் தயாரித்திருந்த இப்படத்திற்கு செல்வ கணேஷ் இசையமைத்திருந்தார். ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்ற இந்த படம், 2019 ஆம் ஆண்டில் விக்ராந்த் நடிப்பில் வெண்ணிலா கபடி குழு இரண்டாம் பாகம் வெளியானது. 

இந்த நிலையில் வென்ணிலா கபடி குழு வெளிவந்து இன்றுடன் 15 ஆண்டுகளைக் கடக்கிறது. இதையொட்டி சுசீந்திரன் கூறுகையில், “வெண்ணிலா கபாடி குழு இன்றுடன் 15 வருடங்கள் நிறைவானதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். எனக்கு முதல் வாய்ப்பை வழங்கிய தயாரிப்பாளர் ஆனந்துக்கு என் உளமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன். என்னுடன் பணியாற்றிய அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் பத்திரிகை நண்பர்களுக்கும் நன்றி” என்றுள்ளார். 

இதனைத் தொடர்ந்து இப்படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமான விஷ்ணு விஷால், “என் முதல் படமான 'வெண்ணிலா கபடி குழு' வெளிவந்து பதினைந்து வருடங்கள் நிறைவடைந்துள்ளது. என் திரைப்பயணம் முழுக்க ஒரு ரோலர்கோஸ்டர் போல பரபரப்பாகவும், இனிமையாகவும் அமைந்ததில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன். எனது திரை வாழ்க்கைக்குச் சிறப்பான தொடக்கத்தை அளித்த என் இயக்குநர் சுசீந்திரனுக்கு நன்றி. திரைப்படங்கள் சமூகத்தில் அழுத்தமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை நான் உறுதியாக நம்புகிறேன். எனக்கு வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம், எனது படங்களின் மூலம் நல்ல கருத்துக்களைப் பார்வையாளர்களுக்கு எடுத்துச் சொல்ல முயன்றுள்ளேன். 

எனது படங்கள் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தாவிட்டாலும், எந்த வித எதிர்மறையான தாக்கத்தையும் ஏற்படுத்திவிடக் கூடாது என்பதில் நான் தெளிவாக இருக்கிறேன். அந்த வகையில் எனது திரைப்படங்கள் மக்களிடம் பாஸிட்டிவான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன என்பதில் நான் பெருமைப்படுகிறேன். எனது பதினைந்து வருடப் பயணத்தில் எப்போதும் வித்தியாசமாக ஏதாவது செய்யவே முயன்றிருக்கிறேன். இதுவரை நான் நடித்துள்ள 20 படங்களில் பாதிக்கு மேல் தமிழ் சினிமா ரசிகர்களின் இதயங்களில் என்றென்றும் வாழும் என்பதே எனக்குப் பெருமை.

என் திரைப் பயணத்தின் இந்த 15வது ஆண்டு எனக்கு இன்னும் ஸ்பெஷலாக அமைந்துள்ளது. 'லால் சலாம்' எனும் அற்புதமான படத்தில், நம் திரையுலகின் மிகப்பெரிய ஆளுமை மற்றும் சிறந்த மனிதரான ரஜினிகாந்துடன் திரையைப் பகிர்ந்து கொள்கிறேன். எனது பயணம் சரியான தருணத்திலும் சரியான திசையிலும் உச்சத்தை நோக்கிச் செல்வது மகிழ்ச்சி.! 'வாழ்க்கை உங்களைச் சோதிக்கும். உங்கள் திறமைக்குப் பல சவால்களைத் தரும். ஆனால் விடாமுயற்சியுடன் தெளிவான நோக்கத்துடன். உங்கள் பணியில் நீங்கள் கவனம் செலுத்தி வலுவாக நின்றால், வெற்றியை யாராலும் எதனாலும் தடுக்க முடியாது” என்று அறிக்கை வெளியிட்டுள்ளார். 

Next Story

“என் கொள்கைகளை பேசும் படமாக அமைந்தது” - சத்யராஜ்

Published on 29/11/2023 | Edited on 29/11/2023

 

sathyaraj speech in valli mayil audio launch

 

சுசீந்திரன் இயக்கத்தில், விஜய் ஆண்டனி, ஃபரியா அப்துல்லா, பாரதிராஜா, சத்யராஜ் நடித்துள்ள புதிய திரைப்படம் ‘வள்ளிமயில்’. இவர்களுடன் அறந்தாங்கி நிஷா, கனி அகத்தியன், புஷ்பா புகழ் சுனில், ரெடின் கிங்ஸ்லி, ஜி பி முத்து, தயாளன்  உட்பட பல நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர். தாய் சரவணன் தயாரித்துள்ள இப்படத்திற்கு இமான் இசையமைத்துள்ளார். 80களின் நாடகக்கலை பின்னணியில்  திரில்லர் படமாக உருவாகியுள்ள இப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா படக்குழுவினர் கலந்து கொள்ளப் பத்திரிகை, ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

 

இவ்விழாவினில் சுசீந்திரன் பேசியதாவது, “நல்லுசாமி பிக்சர்ஸுடன் எனக்கு இது 4 வது படம். வள்ளி மயில் ஒரு க்ரைம் திரில்லராக ஆரம்பித்த படம். ஒரு வில்லனைப் பின்னணியாகக் கொண்டு கதை நடக்கும். பிரகாஷ்ராஜ் சார் மிரட்டியிருக்கிறார். இமான் சார் உடன் 7  வது படம், இன்னும் நிறையப் படங்கள் வேலை செய்வோம். விஜய் ஆண்டனி சாருடன், முதல் முறையாக வேலை செய்கிறேன். உங்கள் படம் சார் நீங்கள் சொல்வதை செய்கிறேன் என்று வந்தார், அவருக்கு நன்றி. வெண்ணிலா கபடிக் குழு படத்திற்குப் பிறகு நிறையக் கதாபாத்திரங்கள். சத்யராஜ் சார் மிக முக்கியமான ரோல், அவரைச் சுற்றி 4 பேர். அதே போல், விஜய் ஆண்டனியை சுற்றி 4 பேர் எனப் பெரிய கூட்டம் படத்தில் இருக்கும். ஃபரியா அப்துல்லா மிக முக்கியமான ரோல், அற்புதமாக நடித்துள்ளார். மிகச் சிக்கலான கதை, அதை மிக எளிமையாகச் சொல்ல முயன்றுள்ளோம்” என்றார்.

 

விஜய் ஆண்டனி பேசுகையில், “சுசீந்திரன் சார் உடன் வேலை பார்த்தது மிக நல்ல அனுபவம். பிச்சைக்காரன் படமெடுக்கும் போது, இந்தப் படம் வேலை பார்க்க வேண்டிய கட்டாயம் நிகழ்ந்தது. இந்த படத்தில் இயக்கம் பற்றி நான் நிறையக் கற்றுக்கொண்டேன். சுசீந்திரன் சாருக்கு நன்றி. சத்யராஜ் சாருடன் இணைந்து திரையில் நடிப்பது மிக்க மகிழ்ச்சி, அவருக்கு நான் ரசிகன். இமானுக்கும் நான் ரசிகன். அவரது இசை குறித்து எனக்கு எப்போதும் ஆர்வம் இருக்கும். அவரது அப்பா எனக்கு நெருக்கம். அவரது வளர்ச்சி, மகிழ்ச்சி அளிக்கிறது” என்றார். 

 

சத்யராஜ் பேசுகையில், “நாம் நடிக்கும் நிறைய படங்களில் நம் கொள்கைகள் பற்றி எல்லாம் பேச முடியாது. வேலை பார்க்க வந்துள்ளோம். அதை மட்டும் செய்ய வேண்டும் எனச் செய்துவிட்டுப் போவோம். ஆனால் இந்தப் படம் என் கொள்கைகள் பேச முடிந்த படமாக அமைந்தது மகிழ்ச்சி. சுசீந்திரன் ஒவ்வொரு படமும் வித்தியாசமாக எடுக்கிறார். இன்னொரு கதை வைத்துள்ளார், அது வந்தால் இன்னும் மிகப்பெரிய படமாக வரும். விஜய் ஆண்டனி மிகச்சிறந்த மனிதர், தனக்கு என்ன வரும் என்பதில் தெளிவானவர். அவருடன் நடித்தது மகிழ்ச்சி. வள்ளி மயில் எனப் பெண் கதாப்பாத்திர பெயரில் தலைப்பு வைத்ததற்கு மகிழ்ச்சி. அதற்கு ஒப்புக்கொண்ட விஜய் ஆண்டனிக்கு நன்றி.  இமான் பற்றி மிகச் சிறந்த விஷயங்கள் கேட்டுள்ளேன். எனக்குத் தெரிந்த ஒரு படத்திற்கு சம்பளமே வாங்காமல் இசையமைத்தார், உங்கள் மனதிற்கு நன்றி. ஃபரியா மிகச்சிறந்த நாயகி, எது சொன்னாலும் உடனே செய்வார். புதுமையான கதைக்களம். இப்படத்திற்காக உங்களைப்போல் நானும் காத்திருக்கிறேன்” என்றார்.