manobala said did not starring vijay thalapathy66 movie

Advertisment

பிரபல தெலுங்கு இயக்குநர்வம்சி பைடிப்பள்ளி இயக்கும் தளபதி 66 படத்தில் விஜய் நடித்து வருகிறார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க, முக்கிய கதாபாத்திரத்தில் சரத்குமார், பிரகாஷ் ராஜ், பிரபு, ஷாம், யோகி பாபு, சங்கீதா, சம்யுக்தா, ஜெயசுதா உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். தமன்இசையமைக்கும் இப்படத்தை தில் ராஜு தயாரிக்கிறார். இப்படம் பூவே உனக்காக, காதலுக்கு மரியாதைபோன்றுகுடும்ப பின்னணி படமாக இருக்கும் என படக்குழு ஏற்கனவே தெரிவித்திருந்தது. ஹைதராபாத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் நேற்று 'தளபதி 66' படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலானது. அதில் சரத்குமார், மனோபாலா மற்றும் இதர நடிகர் ஒருவர் உள்ளனர். இதையடுத்துரசிகர்கள் 'தளபதி 66' படத்தில் மனோபாலாவும்நடிப்பதாக சமூக வலைதளங்களில்பகிர்ந்து வந்தனர். இதனைப் பார்த்தமனோபாலா, "போலியான தகவல், இது ஒரு சந்திப்பு மட்டுமே" எனத்தெரிவித்துள்ளார்.