santhanam

Advertisment

கடந்த 2017ஆம் ஆண்டு செல்வராகவன் இயக்கத்தில் சந்தானம் நடிப்பில் உருவான படம் மன்னவன் வந்தானடி. சுஷாந்த் பிரசாத், சித்தார்த் ராவ், செல்வராகவன், கீதாஞ்சலி செல்வராகவன் ஆகியோர் இணைந்து தயாரித்தனர்.

விறுவிறுப்பாக தொடங்கப்பட்டு ஷூட் செய்யப்பட்ட இப்படம், 80 சதவீத ஷூட்டிங் முடிந்த நிலையில் ஃபைனான்ஸ் பிரச்சனை காரணமாக நிறுத்தப்பட்டது. இதனிடையே செல்வா இயக்கத்தில் உருவான நெஞ்சம் மறப்பதில்லை படமும் ரிலீஸாக முடியாமல் இன்றும் கெடப்பில் உள்ளது.

இந்த இரண்டு படங்களின் பிரச்சனைகளுக்கு இன்னும் முடிவு கிடைக்காமலே இருந்தது. இந்நிலையில் மன்னவன் வந்தானடி பிரச்சனைகள் அனைத்தும் தற்போது தயாரிப்பாளருக்கு சாதகமாக அமைந்திருப்பதால், மீதமுள்ள ஷூட்டிங்கை முடித்து படத்தை ரிலீஸ் செய்யலாம் என்று தயாரிப்பாளர் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. படத்தின் மொத்த உரிமையும் ரேடியன்ஸ் தயாரிப்பு நிறுவனத்திற்கு மாற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisment

அனைத்து பிரச்சனைகளையும் தயாரிப்பாளர் வருண் மணியன் தீர்த்துவிட்டதால், அடுத்து இயக்குனர் செல்வராகவனிடமும் நடிகர் சந்தானமிடமும் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தெரிகிறது. விரைவில் இதுகுறித்தான அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.