Skip to main content

"ஆக்சன் இப்போதுதான் ஆரம்பமாகியுள்ளது!" - மகேஷ் பாபு பெருமிதம்!

Published on 24/07/2021 | Edited on 24/07/2021

 

vdbsbsdbf

 

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள், நேற்று (23.07.2021) கோலாகலமான துவக்க விழாவுடன் தொடங்கியது. இந்தநிலையில், டோக்கியோ ஒலிம்பிக்கின் முதல் தங்கப் பதக்கத்தை சீனா வென்றுள்ளது. மகளிர் 10 மீட்டர் ஏர் ரைஃபிள் துப்பாக்கிச் சுடுதலில் சீன வீராங்கனை யாங் தங்கம் வென்று அசத்தியுள்ளார். இந்த துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் ரஷ்யா வெள்ளி பதக்கத்தையும், சுவிட்சர்லாந்து வெண்கலத்தையும் வென்றுள்ளது.

 

இதற்கிடையே, பளு தூக்கும் போட்டியில் இந்தியாவின் மீராபாய் சானு வெள்ளிப் பதக்கம் வென்று வரலாறு படைத்துள்ளார். மகளிருக்கான 49 கிலோ எடைப்பிரிவு பளு தூக்கும் போட்டியில் வெள்ளி வென்றதன் மூலம், ஒலிம்பிக்கில் வெள்ளி வென்ற முதல் இந்திய பளுதூக்கும் வீரர் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளார். இவருக்கு உலகம் முழுவதும் உள்ள இந்தியர்களிடம் இருந்து வாழ்த்துகள் குவிந்துவரும் நிலையில், தெலுங்கு நடிகர் மகேஷ் பாபு வாழ்த்து தெரிவித்து ட்வீட் செய்துள்ளார். அதில்...

 

bfbfxbfxcx

 

"பரபரக்கும் ஒரு தொடக்கம்! டோக்கியோ 2020 ஒலிம்பிக்கில் பளு தூக்குதலுக்கான வெள்ளிப் பதக்கம் வென்ற மீராபாய் சானுவுக்கு மிகப்பெரிய வாழ்த்துகள். ஆக்சன் இப்போதுதான் ஆரம்பமாகியுள்ளது!" என பதிவிட்டுள்ளார். மீராபாய் சானுவின் வெள்ளிப் பதக்கம், டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியா வென்ற முதல் பதக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“இனி நீங்கதான் என் அப்பா அம்மா” - எமோஷ்னலான மகேஷ் பாபு

Published on 10/01/2024 | Edited on 10/01/2024
mahesh babu emotional speech in Guntur Kaaram  event

மகேஷ் பாபு, ஸ்ரீ லீலா நடிப்பில் த்ரிவிக்ரம் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் குண்டூர் காரம். எஸ். ராதா கிருஷ்ணா தயாரித்துள்ள இப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். சங்கராந்தி விழாவை முன்னிட்டு வருகிற 12 ஆம் தேதி இப்படம் வெளியாகிறது. இதனால் ப்ரொமோஷன் பணிகளில் படக்குழு ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில் ஆந்திராவில் ரசிகர்கள் முன்னிலையில் பிரம்மாண்ட நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் படக்குழுவினர் கலந்துகொண்டு பேசினர். அப்போது மகேஷ் பாபு, ரசிகர்கள் தான் எனக்கு இனி அப்பா அம்மா என எமோஷ்னலாக பேசியுள்ளார். 

அவர் பேசுகையில், “சங்கராந்தி விழா எனக்கு எப்போதுமே ஸ்பெஷல். என்னை விட, என் அப்பா கிருஷ்ணாவுக்கு இது ஸ்பெஷல். என் படம் சங்கராந்திக்கு ரிலீஸ் என்றால், அது நிச்சயம் பிளாக்பஸ்டர் ஆகிடும். அது இந்த வருடமும் தொடரும். ஆனால் இந்த சங்கராந்தி எனக்கு புதிது. ஏனென்றால் என் அப்பா எங்களுடன் இல்லை. அவர் ஒவ்வொரு முறையும் எனக்கு போன் செய்து என் படத்தின் வசூல் பற்றி பேசுவார். அதை கேட்கும்போது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். நான் எப்போதும் அந்த போனுக்காக காத்திருப்பேன். 

ஆனால் இப்போது ரசிகர்களாகிய நீங்கள்தான் எனக்கு அதை சொல்ல வேண்டும். இனிமேல் நீங்கதான் என் அப்பா, நீங்கதான் என் அம்மா. நீங்கதான் எனக்கு எல்லாமே. உங்கள் ஆசீர்வாதம் எப்போதும் எனக்கு இருக்க வேண்டும்” என்றார். கடந்த ஆண்டு மகேஷ் பாபுவின் அண்ணன் ரமேஷ் பாபு, தாயார் இந்திரா தேவி மற்றும் தந்தையார் கிருஷ்ணா ஆகியோர் காலமானார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story

முன்னணி நடிகருக்கு ஜோடியாகும் சம்யுக்தா

Published on 22/06/2023 | Edited on 22/06/2023

 

samyuktha to pair witha mahesh babu

 

திரிவிக்ரம் ஸ்ரீ னிவாஸ் இயக்கத்தில் மகேஷ் பாபு நடிப்பில் உருவாகி வரும் படம் 'குண்டூர் காரம்'. இப்படத்தில் கதாநாயகிகளாக பூஜா ஹெக்டே மற்றும் ஸ்ரீ லீலா ஆகியோர் கமிட்டாகியிருந்தனர். ராதா கிருஷ்ணா தயாரிக்கும் இப்படத்திற்கு தமன் இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். இப்படத்தின் வீடியோ ஒன்று மகேஷ் பாபுவின் தந்தையான மறைந்த நடிகர் கிருஷ்ணாவின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியானது. 

 

இப்படத்தில் இருந்து பூஜா ஹெக்டே விலகியுள்ளதாகத் தகவல் உலா வந்து கொண்டிருக்கிறது. கால்ஷீட் பிரச்சனை எனச் சொல்லப்படுகிறது. மேலும் இசையமைப்பாளர் தமனும் விலகியுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் பூஜா ஹெக்டேவுக்கு பதில் சம்யுக்தா நடிக்கவுள்ளதாகத் தற்போது தகவல் வெளியாகியுள்ளது. 

 

மலையாள நடிகையான சம்யுக்தா, தமிழ், மலையாளம், தெலுங்கு ஆகிய மூன்று மொழிகளில் கவனம் செலுத்தி வருகிறார். இந்தாண்டு தெலுங்கில் தனுஷுக்கு ஜோடியாக 'சார்' மற்றும் சாய் தரம் தேஜூக்கு ஜோடியாக 'விருபக்‌ஷா' உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார்.