Skip to main content

மாமன்னன் குறித்து லோகேஷ் கனகராஜ்

Published on 02/08/2023 | Edited on 02/08/2023

 

lokesh kanagaraj about maamannan

 

மாரி செல்வராஜ் இயக்கத்தில் ரெட் ஜெயண்ட் தயாரிப்பில் உதயநிதி, கீர்த்தி சுரேஷ், வடிவேலு, ஃபகத் ஃபாசில் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த மாதம் 29 ஆம் தேதி வெளியானது 'மாமன்னன்' படம். உதயநிதி நடிப்பில் கடைசிப் படமாக வெளியாகியுள்ள இப்படம், வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. தமிழில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து தெலுங்கில் டப் செய்யப்பட்டு வெளியானது. 

 

முன்னதாக இப்படத்தைப் பார்த்த முதல்வர் மு.க. ஸ்டாலின், திருமாவளவன் எம்.பி, நல்லகண்ணு, சி. மகேந்திரன் மற்றும் ஜி. ராமகிருஷ்ணன் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் பாராட்டினார்கள். மேலும் ரஜினிகாந்த், கமல்ஹாசன், தனுஷ், பா. ரஞ்சித் உள்ளிட்ட பல திரைப் பிரபலங்களும் பாராட்டினர். அண்மையில் தென்னிந்தியத் திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனம், தமிழ்நாடு திரைப்பட இயக்குநர் சங்கம் ஆகியோருக்கு சிறப்பு திரையிடல் திரையிடப்பட்ட நிலையில் படத்தைப் பார்த்து ஆர்.கே. செல்வமணி, ஆர்.வி. உதயகுமார் உள்ளிட்ட பலர் பாராட்டு தெரிவித்திருந்தனர். 

 

இதனைத் தொடர்ந்து கடந்த மாதம் 27ஆம் தேதி ஓடிடியில் வெளியான நிலையில் சில நாட்களாக ஃபகத் ஃபாசில் கதாபாத்திரம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று, அது தொடர்பான காட்சிகளை எடிட் செய்து ட்ரெண்டாக்கி வந்தனர். மேலும் தங்கள் சமூகத்தை சார்ந்தவர் எனப் பலரும் அவர்களது சமூகம் தொடர்பான பாடல்களை எடிட் செய்து பகிர்ந்து வந்தனர். இது தவறான போக்கு என சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பலரும் அவர்களது கருத்துகளை முன்வைத்தார்கள். 

 

இந்நிலையில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மாமன்னன் படத்திற்கு பாராட்டு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "எனக்கு தெரியும், நான் கொண்டாட்டத்திற்கு தாமதம்தான். ஆனால் மாமன்னன் பார்ப்பதற்கு சிறப்பாக இருந்தது. எல்லா துறைகளிலும் இருந்து சிறப்பான உழைப்பை கொடுத்துள்ளார்கள். படம் ஏற்படுத்திய தாக்கத்திலிருந்து இன்னும் மீளவில்லை" என குறிப்பிட்டு உதயநிதி, மாரி செல்வராஜ், ஏ.ஆர் ரஹ்மான், வடிவேலு, கீர்த்தி சுரேஷ், ஃபகத் ஃபாசில் உள்ளிட்ட படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

 

 

 

சார்ந்த செய்திகள்