lift

விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘சரவணன் மீனாட்சி’ சீரியலில் நடித்ததன் மூலம் பிரபலமடைந்த கவின், ‘நட்புன்னா என்னனு தெரியுமா’ என்ற படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார். இப்படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. இதனைத் தொடர்ந்து, கவின் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள படம் ‘லிஃப்ட்’. இப்படத்தில் கவினுக்கு ஜோடியாக அம்ரிதா ஐயர் நடித்துள்ளார். வினீத் வரப்பிரசாத் இயக்க, ஈகா என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது.

Advertisment

இப்படம், அக்டோபர் 1ஆம் தேதி டிஸ்னி ஹாட்ஸ்டார் தளத்தில் நேரடியாக வெளியாகவுள்ள நிலையில், படத்தின் ட்ரைலர் இன்று வெளியிடப்பட்டுள்ளது. படத்தின் ட்ரைலரை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தின் வாயிலாக வெளியிட்ட நடிகர் சிவகார்த்திகேயன் படக்குழுவினருக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

Advertisment