Skip to main content

விக்னேஷ் சிவன் - பிரதீப் ரங்கநாதன் இணையும் புதிய படத்தின் பூஜை!

Published on 15/12/2023 | Edited on 15/12/2023

 

LIC  movie pooja

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ லலித்குமார் வழங்கும், இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில், பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் புதிய படம் “எல் ஐ சி” பூஜையுடன் துவங்கியது 

இன்றைய இளைய தலைமுறையினரை பிரதிபலிக்கும் வகையில் புதுவிதமான காதல் கதையாக உருவாகும் இப்படத்தின் பூஜையில், இயக்குநர் விக்னேஷ் சிவன், இசையமைப்பாளர் அனிருத், பிரதீப் ரங்கநாதன், நாயகி கிரித்தி ஷெட்டி, எஸ் ஜே சூர்யா, தயாரிப்பாளர் லலித்குமார், இணைத் தயாரிப்பாளர் விஷ்ணு குமார் உட்பட படக்குழுவினர் அனைவரும் கலந்துகொண்டனர்.

மிஷ்கின், யோகிபாபு ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார். ஒளிப்பதிவாளர் ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்கிறார். படத்தொகுப்பு பிரதீப் E ராகவ் செய்கிறார். உடை வடிவமைப்பை பிரவீன் ரஜா செய்கிறார். செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ சார்பில் தயாரிப்பாளர்  லலித்குமார் பிரம்மாண்ட பொருட்செலவில் தயாரிக்கிறார்.  இணைத் தயாரிப்பாளர் L.K.விஷ்ணு குமார். கலக்கலான காதல் காமெடிப் படங்களுக்கு பெயர் பெற்ற விக்னேஷ் சிவன் மற்றும் பிரதீப் ரங்கநாதன் கூட்டணி இப்படத்தில் இணைந்திருப்பது, ரசிகர்கள் மத்தியில் இப்பொழுதே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சார்ந்த செய்திகள்

Next Story

ஆன்மீக பயணத்தில்  விக்னேஷ் சிவன் - நயன்தாரா தம்பதி 

Published on 14/05/2024 | Edited on 14/05/2024
Vignesh Sivan - Nayanthara couple on spiritual journey

விக்னேஷ் சிவன் - நயன்தாரா ஜோடி, 2022ஆம் ஆண்டு ஜூனில் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு வாடகை தாய் மூலம் உயிர், உலக் என்ற இரட்டை ஆண் குழந்தை பிறந்தது. இதையடுத்து அழகு சாதன பொருட்கள் விற்கும் '9 ஸ்கின்' (9 Skin) என்ற நிறுவனத்தை தொடங்கினார்கள். இதனைத் தொடர்ந்து, ஃபெமி 9 (Femi 9) என்ற சானிட்டரி நாப்கின் பொருளையும் அறிமுகப்படுத்தினர்.

இதனிடையே தனது குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படங்களை தங்களது சமூக வலைத்தளப்பக்கத்தில் வெளியிடுவதை வாடிக்கையாக வைத்து வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் சமீபத்தில் அன்னையர் தினத்தன்று நயன் தாரா வெளியிட்ட வீடியோ வைரலானது. இந்த நிலையில் இருவரும் கன்னியாகுமரியில் உள்ள பிரபல கோவில்களில் சாமி தரிசனம் செய்தனர். 

முதலில் நேற்று சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலுக்குச் சென்று வழிபட்ட அவர்கள், அடுத்து நாகர்கோவிலில் உள்ள நாகராஜா கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர். பின்பு சாமிதோப்பில் உள்ள அய்யா வைகுண்டசாமி கோவில் மற்றும் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர். இதையடுத்து இன்று திருச்செந்தூர் முருகன் கோயிலில் சாமி தரிசனம் மேற்கொண்டனர். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது. 
 

Next Story

சிம்பு குறித்து உலா வந்த தகவலுக்கு முற்றுப்புளி வைத்த பிரபலம்

Published on 12/04/2024 | Edited on 12/04/2024
ashwath marimuthu clarifies to simbu fans

பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ஒரு படம் உருவாகுவதாக கடந்த 11ஆம் தேதி அறிவிப்பு வெளியானது. ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு லியோன் ஜேம்ஸ் இசையமைக்கிறார். இப்படத்தின் அறிவிப்பு வீடியோ பலரது கவனத்தை ஈர்த்து வருகிறது. 

அந்த வீடியோவில், பிரதீப் ரங்கநாதனும் அஷ்வத் மாரிமுத்துவும் நண்பர்கள் எனவும் இரண்டு பேரும் 10 வருடங்களுக்கு முன்பே இணைந்து படம் பண்ண ஆசைப்பட்டதாகவும் அந்த நினைவுகளைப் பகிரும் வகையில் அமைந்திருந்தது. மேலும் 10 வருடத்திற்கு முன்னால் எடுத்த ஃபோட்டோவை ரீ கிரியேட் செய்து அதே இடத்தில் தற்போது ஃபோட்டோ எடுத்து பகிர்ந்திருந்தனர். 

ashwath marimuthu clarifies to simbu fans

இந்த நிலையில் இப்படத்தில் சிம்பு முதலில் நடிக்கவிருந்து பின்பு பிரதீப் ரங்கநாதனுக்கு வந்துள்ளதாக ஒரு தகவல் உலா வந்து கொண்டிருந்தது. இத்தகவலை தற்போது இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து மறுத்துள்ளார். “எல்லா சிம்பு ரசிகர்களுக்கும் ஒன்றை சொல்லிக்கொள்கிறேன். சிம்பு சார் என்னை அழைத்து படத்தின் அறிவிப்பு வீடியோவை அவரது ஸ்டைலில் பாராட்டினார். ஓ மை கடவுளே படத்தின் போதும் முதல் ஆளாக அழைத்து ஒன்றரை மணி நேரம் பாராட்டினார். ஒரு விஷயத்தை தெளிவு படுத்த விரும்புகிறேன். அவருக்காக நான் எழுதிய ஸ்கிரிப்ட் வேறு. அவர் ரெடியாக இருக்கும் போது அப்படம் தொடங்கும்” என குறிப்பிட்டுள்ளார். 

அஷ்வத் மாரிமுத்து அவரது முதல் படமான ஓ மை கடவுளே படம் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். அஷோக் செல்வன், ரிதிகா சிங் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படம் 2020ஆம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தை அடுத்து தெலுங்கில் ஓ மை கடவுளே படத்தை ரீமேக் செய்தார். இதையடுத்து ப்ரதீப் ரங்கநாதன் படத்தை இயக்குகிறார்.