leo fdfs celebration From engagement to biryani fans who welcomed

Advertisment

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லலித் தயாரிப்பில் விஜய், த்ரிஷா, பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், அர்ஜுன், கவுதம் மேனன் உள்ளிட்ட பலர் நடிப்பில் அனிருத் இசையில் உருவாகியுள்ள லியோ படம் இன்று உலகம் முழுவதும் உள்ளிட்ட பிரம்மாண்டமாக வெளியாகியுள்ளது. பல்வேறு சர்ச்சைகளை தாண்டி இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட சில மொழிகளில் வெளியாகியுள்ளது.

முதல் நாளான இன்று திரையரங்கம் முன்பு கேக் வெட்டி, பேனர் வைத்து, மேளதாளத்துடன் வரவேற்று கொண்டாடி வருகின்றனர். கேரளா, ஆந்திராஉள்ளிட்ட சில மாநிலங்களில் காலை 4 மணிக்கே சிறப்பு காட்சி தொடங்கப்பட்டது. தமிழகத்தில் தமிழக அரசு உத்தரவின்படி 9 மணிக்கு சிறப்பு காட்சி தொடங்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு பகுதிகளிலும் வித்தியாசமான முறையில் ரசிகர்கள் படத்தை வரவேற்று வரும் நிலையில் புதுக்கோட்டையில் ஒரு தம்பதி திரையரங்கினுள்நிச்சயம் செய்துகொண்டனர். முதல் காட்சியின் போது மாலை போட்டுகொண்டு மோதிரம் மாற்றி திரையரங்கிலேயேநிச்சயம் செய்துள்ளனர். இது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. அதேபோல் திருப்பூரில் 20அடி நீளமுள்ள கேக் வெட்டியும், நடனமாடியும் பட வெளியீட்டை கொண்டாடியுள்ளனர். காஞ்சிபுரத்தில் ஒரு திரையரங்கில் முதல் காட்சியை பார்த்துவிட்டு வரும் விஜய் ரசிகர்களுக்கு விஜய் மக்கள் இயக்கம் சார்பில் பிரியாணி வழங்கவுள்ளனர்.

Advertisment

இதனிடையே சென்னை சத்தியம் திரையரங்கில் தொழில் நுட்ப கோளாறு காரணமாக தாமதமாக திரையிடப்பட்டது. இதனால் அங்கிருந்த ரசிகர்கள் திரையரங்க ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்பு கோளாறை சரி செய்து காட்சி திரையிடப்பட்டது.