Skip to main content

'லெஜண்ட்' படத்தின் இந்தி ட்ரைலரை வெளியிட்ட படக்குழு 

 

Legend Hindi Trailer out now


சரவணா ஸ்டோர் குழுமத்தின் உரிமையாளரின் மகனான சரவணன் அருள் கதாநாயகனாக அறிமுகமாகவுள்ள திரைப்படம் 'தி லெஜண்ட்'. இப்படத்தை ஜே.டி - ஜெரி ஆகியோர் இயக்குகின்றனர். இப்படத்தில் சரவணன் அருளுக்கு ஜோடியாக பிரபல பாலிவுட் நடிகை ஊர்வசி ராவ்டேலா நடிக்கிறார். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கும் இப்படத்தில் விவேக், பிரபு, யோகிபாபு, நாசர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் வரும் 28 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

 

சமீபத்தில் இப்படத்தின் தமிழ் மற்றும் தெலுங்கு ட்ரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது இந்தி ட்ரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்படத்தின் இந்தி வெளியீட்டு உரிமையை கணேஷ் பிலிம்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளதையடுத்து, அங்கு பிரமாண்டமாக படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.