தமிழ் திரையுலகில் புதிதாக தொடங்கப்பட்டிருக்கிறது சசிகலா புரடக்சன்ஸ் தயாரிப்பு நிறுவனம். ஒரு படத்தை உருவாக்குவதற்கான அனைத்து நிலைகளையும் ஒருங்கே சொந்தமாக கொண்டிருக்கும் இந்நிறுவனம் ஏவிஎம் அரங்கினுள் தற்போது செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனத்தின் முதல் படைப்புகளாக ஆண்ட்ரியா நடிப்பில் 'கா', கிஷோர் நடிப்பில் 'ட்ராமா' மற்றும் புதுமுகங்கள் நடிப்பில் 'லாகின்' படங்கள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன. இப்படைப்புகளின் டிரெய்லர் வெளியீட்டு விழாவும், இந்நிறுவனத்தின் துவக்க விழாவும் இன்று இனிதே நடைபெற்றது.
இவ்விழாவில் சசிகலா புரொடக்ஷன்ஸ் சார்பில் சலீம் பேசுகையில், "இங்கு எங்களை வாழ்த்த வந்திருக்கும் அனைவருக்கும் நன்றி. இந்நிறுவனத்தை புதிய நல்ல படைப்புகளை உருவாக்கும் எண்ணத்தில் உருவாக்கியுள்ளோம். உங்கள் ஆதரவை தாருங்கள் நன்றி" என்றார்.
“கா” பட இயக்குநர் நாஞ்சில் பேசுகையில், " கா படம் ஒரு ஹைபர்லிங் கதை. ஒரு காட்டில் 24 மணி நேரத்தில் நடக்கும் சம்பவங்கள் தான் படம். இந்தப்படத்திற்கு நடிகர் சலீம் கௌஷல் மிகப்பெரும் உதவியாக இருந்தார். அவர் இப்போது இல்லாதது பெரிய வருத்தம். எனக்கு வாய்ப்பளித்த ஜான் மேக்ஸ் அவர்களுக்கும், படத்தை வெளியிடும் ஆண்டனி தாஸ் அவர்களுக்கும் நன்றி" என்றார்.
ட்ராமா இயக்குநர் அர்ஜூன் திருமலா பேசுகையில், "தமிழில் இது எனது முதல் படம். இது சிங்கிள் ஷாட் படம். எல்லா படமும் எடுப்பது மிகவும் கஷ்டம் தான் ஆனால் இது சிங்கிள் ஷாட் என்பதால் இன்னும் கொஞ்சம் கஷ்டம் அதிகமாக இருந்தது. இது ஒரு கமர்ஷியல் படம். சிங்கிள் ஷாட்டில் மூன்று பாடல்கள், ஃபிளாஷ்பேக், என அனைத்து கமர்ஷியல் அம்சங்களும் உள்ளது. படத்தில் உழைத்த அனைவருக்கும் நன்றி" என்றார்.
லாகின் திரைப்பட இயக்குநர் ராஜேஷ் வீரமணி பேசுகையில், "எங்கள் தயாரிப்பாளர் ஜேகே மற்றும் சசிகலா புரொடக்சன்ஸ் நிறுவனத்திற்கு நன்றி. 2 மணி நேரம் உங்களை சுவாரஸ்யப்படுத்தும் ஒரு கதையை உண்மையாக அர்ப்பணிப்புடன் சொல்லியுள்ளோம்" எனக் கூறினார்.