Skip to main content

பழம் பெரும் பாடலாசிரியருக்கு லதா மங்கேஷ்கர் இரங்கல்!

Published on 30/05/2020 | Edited on 30/05/2020

 

yogesh kaur

பழம் பெரும் பாடலாசிரியர் யோகேஷ் கவுர் வயது மூப்பு காரணமாக காலமானார். இவருக்கு வயது 77. உத்தரபிரதேசம் மாநிலத்திலுள்ள லக்னோவில் 1943ஆம் ஆண்டு பிறந்தவர். 
 


கடந்த வெள்ளிக்கிழமை அன்று மறைந்த பாடலாசிரியர் 60 மற்றும் 70 களில் பல ஹிட் பாடல்களை எழுதியிருக்கிறார். 

இந்நிலையில் அவருடன் இணைந்து பணிபுரிந்த புகழ்பெற்ற பாடகி லதா மங்கேஷ்கர் ட்விட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், "யோகேஷ்ஜி மரணமடைந்த செய்தி தற்போது தான் எனக்குத் தெரியும். மக்களின் மனம் கவர்ந்த பல பாடல்களை அவர் எழுதியுள்ளார். மிகவும் அமைதியான கண்ணியமான மனிதர்" எனது இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று  கூறியுள்ளார். 
 

 

 

சார்ந்த செய்திகள்