Skip to main content

''மீண்டும் தொடங்குகிறது சீரியல் ஷூட்டிங்..!'' - தேதியை அறிவித்த குஷ்பூ!

Published on 08/06/2020 | Edited on 08/06/2020

 

fsa


கரோனா அச்சுறுத்தலால் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ள தொலைக்காட்சி சீரியல்களுக்கான படப்பிடிப்பு தொடங்க சமீபத்தில் தமிழக அரசு அனுமதி அளித்தது. இந்த அனுமதி வழங்கியமைக்காகத் ஃபெப்சியும், தென்னிந்திய தொலைக்காட்சி தயாரிப்பாளர்கள் சங்கம் (STEPS) முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி மற்றும் தகவல் மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜுக்கு சமீபத்தில் நன்றி தெரிவித்துள்ள நிலையில் தற்போது ஸ்டெப்ஸ் சங்கத்தின் பொதுச் செயலாளர் நடிகை குஷ்பூ நாளை முதல் சின்னத்திரை படப்பிடிப்பு தொடங்கவுள்ளது குறித்தும், தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்தும் சமூகவலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில்...
 


"பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு, சின்னத்திரை படப்பிடிப்புகள் நாளை முதல் தொடங்க தயாராக உள்ளது. பொது முடக்கம் காரணமாக 70 நாட்கள் இடைவேளைக்குப் பிறகு நாங்கள் படப்பிடிப்பைத் தொடங்குகிறோம். எங்கள் அன்றாட தினக்கூலித் தொழிலாளர்களின் முகங்களில் இறுதியாகப் புன்னகையைப் பார்க்க முடிகிறது. எங்களின் பாதுகாப்பை உறுதி செய்ய ஒவ்வொரு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்துள்ளோம். உங்களுக்குப் பிடித்த நிகழ்ச்சிகள் விரைவில் ஒளிபரப்பப்படும்.

ஃபெப்சி தலைவர் ஆர்.கே.சல்வமணி மற்றும் அவரது குழுவின் பெரும் ஆதரவு இல்லாவிட்டால் இது சாத்தியமில்லை. எனது ஸ்டெப்ஸ் சங்க உறுப்பினர்களான சுஜாதா கோபால், பலேஸ்வர், ஷங்கர், பாலு மற்றும் எங்கள் தலைவர் சுஜாதா அவர்களுக்கு என் ஆரவாரமான நன்றிகள். ஒரு பாறை போல் எங்களுடன் துணை நின்ற எனது தயாரிப்பாளர்கள் அனைவருக்கும் ஒரு பெரிய நன்றி.
 


கடைசியாக தகவல் மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜு அவர்களுக்கு ஒரு பெரிய நன்றி. மேலும் அரசு, தலைமைச் செயலகம் மற்றும் எங்களுக்கு உதவிய ஒவ்வொருவருக்கும் நன்றி. ஒவ்வொரு துளியும் ஒரு கடலை உருவாக்குகிறது. அதை நாங்கள் நிரூபித்துள்ளோம். கடின உழைப்பு, நேர்மை, நல்ல நோக்கங்கள் ஒருபோதும் தோல்வியடையாது" எனக் கூறியுள்ளார்.


 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“கையெழுத்து போடுங்கள் என்றால் போடுவேன்” - வெளிப்படையாகப் பேசிய குஷ்பு

Published on 06/04/2024 | Edited on 06/04/2024
kushbu sundar about aranmanai 4

2024 ஆம் ஆண்டு நாட்டின் 18வது நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் தேதி 7 கட்டங்களாக நடைபெறுகிறது. ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 அன்று நடைபெறவுள்ளது. இதையொட்டி அரசியல் கட்சிகள் தேர்தலை எதிர்கொள்ளத் தயாராகி வருகின்றன. இதனால் தேர்தல் களம் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தங்கள் கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

அந்த வகையில் வேலூர் மக்களவைத் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் புதிய நீதிக் கட்சியின் நிறுவனத் தலைவர் ஏ.சி.சண்முகத்தை ஆதரித்து நடிகையும் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான பா.ஜ.க.வை சார்ந்த குஷ்பு, வேலூரில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்பொழுது செய்தியாளர்களைச் சந்தித்த அவர், இயக்குநர் சி.சுந்தர் இயக்கத்தில் வெளியாகவுள்ள அரண்மனை 4 திரைப்படத்தை பற்றிப் பேசினார். அவர் பேசியதாவது, “நாங்கள் அரண்மனை 4 பார்த்து விட்டோம். படம் பிரமாதமாக வந்துள்ளது. இதுவரையில் வந்த அரண்மனை படங்களை விட இது வித்தியாசமானதாக இருக்கும். நிறைய உணர்வுப்பூர்வமான காட்சிகள் மற்றும் கமர்சியல் வேல்யூ முழுவதும் ஆக உள்ளது. யோகி பாபு உள்ளிட்ட பல நடிகர்கள் இடம் சிறப்பாக நடித்துள்ளனர்” என்றார்.  

அவரிடம், அரண்மனை திரைப்படம் சீரிஸ் இன்னும் தொடர்ச்சியாக சென்று கொண்டிருக்குமா, எப்போதுதான் அது முடியும் என்ற கேள்வி கேட்கப்பட்ட நிலையில், “அதை நான் முடிவு செய்ய முடியாது. இயக்குநர், எழுத்தாளர் தான் முடிவு செய்வார்கள். இது தான் கதை. கையெழுத்து போடுங்கள் என்றால் போடுவேன் அவ்வளவுதான், எல்லாமே இயக்குநர் தான் முடிவு செய்வார் நான் அல்ல” என பதிலளித்தார். 

அவ்னி சினிமேக்ஸ் சார்பில் குஷ்பு மற்றும் பென்ஸ் மீடியா சார்பில் அருண்குமார் தயாரிப்பில், சுந்தர் சி நடித்துள்ள படம் அரண்மனை 4. இதில் தமன்னா, ராஷி கண்ணா, யோகி பாபு, கோவை சரளா உட்பட பல நடிகர்கள் நடித்துள்ளனர். அரண்மனை பட வரிசையில் நான்காவது படமாக இப்படம் உருவாகியுள்ளது. விரைவில் இப்படம் திரைக்கு வரவுள்ளது. ரிலீஸ் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. சமீபத்தில் ட்ரைலர் வெளியாகியிருந்தது. 

Next Story

குஷ்பு மீது போலீசில் புகார்

Published on 14/03/2024 | Edited on 14/03/2024
Police complaint against Khushbu

மகளிர் உரிமை திட்டப் பயனாளிகளை இழிவுபடுத்தி பேசியதாக பாஜக நிர்வாகியும் நடிகையுமான குஷ்பு மீது புகாரும், கண்டனமும் எழுந்துள்ளது. அந்த வகையில் திமுக மகளிர் அணி சார்பில் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.

சென்னை, திருச்சி, நாமக்கல், தஞ்சாவூர் ,சேலம், ஈரோடு, எடப்பாடி என தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் புதுச்சேரியிலும் 'குஷ்பு மன்னிப்பு கேட்க வேண்டும்' என வலியுறுத்தி போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. சில இடங்களில் அவரது உருவப்படங்கள் எரிக்கப்பட்டு போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், மகளிர் உரிமைத்தொகை குறித்து அவதூறாக பேசிய நடிகை குஷ்பு மீது நடவடிக்கை எடுக்குமாறு ஈரோடு பவானி நகராட்சி தலைவர் சிந்தூரி சார்பில் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.