Krithi Shetty reacts about his rumour

தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வரும் க்ரித்தி ஷெட்டிஜெயம் ரவியின் 'ஜீனி' படம் மூலம் தமிழுக்கு அறிமுகமாகிறார். பான் இந்தியா படமாக தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் இப்படம் வெளியாகவுள்ளது. இப்படத்தின் பூஜை அண்மையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு தனது ஆர்வத்தை வெளிப்படுத்தினார் க்ரித்தி ஷெட்டி.

Advertisment

இந்நிலையில், ஒரு பிரபல ஹீரோவின் மகனால் க்ரித்தி ஷெட்டி துன்புறுத்தப்படுவதாகவும்,அவர் கலந்துகொள்ளும் ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் அந்த நபர் தொல்லை கொடுப்பதாகவும்,எங்கு சென்றாலும்அவரை தன்னிடம்வரச்சொல்லி அவரை கட்டுப்படுத்த முயல்வதாகவும்,க்ரித்தி ஷெட்டியுடன் பழக கடுமையாக முயற்சி செய்கிறார் என்றும், ஆனால், க்ரித்தி ஷெட்டிக்கு இது பிடிக்கவில்லைஎன்றுமீடியாக்களிடம் க்ரித்தி ஷெட்டி தெரிவித்ததாகக் குறிப்பிட்டு ஒரு புகைப்படம்சமூக வலைதளங்களில் அண்மையில் பரவி வந்தது.

Advertisment

இந்நிலையில், இந்ததகவலை மறுத்த க்ரித்தி ஷெட்டி, "தயவு செய்து கதைகளை உருவாக்குவதையும் தவறான தகவல்களைப் பரப்புவதையும் நிறுத்துங்கள். இது ஒரு அடிப்படை ஆதாரமற்ற வதந்தி என்பதால் இதைப் புறக்கணிக்க நினைத்தேன்" என தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.