/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/1123_0.jpg)
சிவகார்த்திகேயன், 'டான்' படத்தை தொடர்ந்து பிரபல தெலுங்கு இயக்குநர் அனுதீப் இயக்கும் 'ப்ரின்ஸ்' படத்தில் நடித்து வருகிறார். கதாநாயகியாக உக்ரைன் நாட்டு நடிகை மரியா ரியாபோஷாப்கா நடிக்கிறார். சத்யராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்திற்கு தமன் இசையமைக்கிறார். இப்படத்தை 'ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ்' நிறுவனத்துடன் இணைந்து 'சுரேஷ் புரொடக்ஷன்' நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இப்படம் தீபாவளிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
இதனையடுத்துசிவகார்த்திகேயன் அடுத்ததாக 'மண்டேலா' படத்தின் இயக்குநர் மடோன் அஷ்வின் இயக்கத்தில் ஒரு படம் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக கியாரா அத்வானி நடிக்கவுள்ளதாக கூறப்பட்ட நிலையில் தற்போது கால்ஷீட் காரணமாக அவர் விலகியுள்ளதாக சொல்லப்படுகிறது. இதனை தொடர்ந்து தற்போது அந்த கதாபாத்திரத்தில் நடிக்க தெலுங்கு நடிகை கீர்த்தி ஷெட்டி ஒப்பந்தமாகி உள்ளதாககூறப்படுகிறது. இவர் தமிழில் பாலா இயக்கும் ’சூர்யா 41’ படத்தில் கதாநாயகியாக நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)