Skip to main content

புல்லட் சாங் ட்ரெண்டாக இதுதான் காரணமாம் - ரகசியம் பகிர்ந்த கீர்த்தி ஷெட்டி 

Published on 14/07/2022 | Edited on 14/07/2022

 

Krithi Shetty

 

லிங்குசாமி இயக்கத்தில் பிரபல தெலுங்கு நடிகர் ராம் பொத்தினேனி, கீர்த்தி ஷெட்டி, ஆதி, நதியா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான ’தி வாரியர்’ திரைப்படம் இன்று வெளியாகியுள்ள நிலையில், நாயகி கீர்த்தி ஷெட்டியை நக்கீரன் ஸ்டூடியோ சார்பில் சந்தித்தோம். அந்தச் சந்திப்பில் ’தி வாரியர்’ படம் குறித்து அவர் பகிர்ந்துகொண்டவை பின்வருமாறு... 

 

”என்னுடைய கேரியரின் ஆரம்பத்தில் இருந்தே தமிழ் ரசிகர்களிடம் இருந்து நிறைய அன்பும் ஆதரவும் எனக்கு கிடைத்திருக்கிறது. அது நானே எதிர்பாராதது. வாரியர் படத்தின் கதைக்களம் தமிழ் ரசிகர்களுக்கு நெருக்கமான களமாக இருக்கும். அப்படி ஒரு படத்தில் நடித்ததில் ரொம்பவும் மகிழ்ச்சி. 

 

லிங்குசாமி சாரின் பையா படம் எனக்கு ரொம்பவும் பிடித்தமான படம். அவர் ஆபிஸில் இருந்து போன் வந்ததுமே உடனே ஓகே சொல்லிட்டேன். பின் அவர் கதை கூறியதும் அதை வேண்டாம் என்று சொல்லமுடியவில்லை. ராம் பொத்தினேனி ஆக்டிங் எனக்கு ரொம்பவும் பிடிக்கும். அதை நேரில் பார்த்ததும் ரொம்ப எக்சைட்டிங் ஆகிட்டேன். படம் பார்க்க நானும் ரொம்ப ஆர்வமா இருக்கேன். தமிழ், தெலுங்கு இரண்டிலுமே தனித்தனியே ஷூட் பண்ணோம். அதனால் டப்பிங் படம் மாதிரியெல்லாம் இருக்காது. லிங்குசாமி சார் இரண்டு ஆடியன்ஸின் பல்சும் தெரிந்தவர் என்பதால் படம் சிறப்பாக வந்துள்ளது.

 

புல்லட் சாங் இன்ஸ்டா ரீல்ஸில் ட்ரெண்டாக வேண்டும் என்பதால் எல்லோரும் ஈசியாக ஆடக்கூடிய ஸ்டெப்ஸ் போடலாம் என்று முடிவெடுத்தோம். நாங்கள் என்ன நினைத்தோமோ சேகர் மாஸ்டர் அதை அப்படியே கொடுத்தார். இன்று எல்லா இடங்களிலும் புல்லட் சாங்தான் ட்ரெண்டிங்கில் உள்ளது. தமிழ் ரசிகர்கள் படத்தை எப்படி கொண்டாடுவார்கள் என்று எனக்குத் தெரியும். அவர்களுடன் அமர்ந்து விசில் அடித்து படம் பார்க்க ஆவலாக உள்ளேன். 

 

பாலா சார் இயக்கத்தில் சூர்யா சாருடனும் நடிக்கிறேன். பாலா சார் இயக்கத்தில் நடித்தது என்னுடைய கேரியரிலேயே சிறப்பான அனுபவமாக இருந்தது. நடிகர்களுக்கு அவர் கொடுக்கும் நம்பிக்கை எனக்கு புதிதாக இருந்தது”. இவ்வாறு கீர்த்தி ஷெட்டி தெரிவித்தார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“எப்போதுமே நடக்காது...” - க்ரித்தி ஷெட்டியுடன் நடிக்க மறுத்த விஜய் சேதுபதி

Published on 23/09/2023 | Edited on 23/09/2023

 

.

vijay sethupathi about krithi shetty

 

விஜய் சேதுபதி வில்லனாக நடித்த ஜவான் படம் வசூலில் சாதனை படைத்து வருகிறது. அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடித்த இப்படம் ரூ.1000 கோடியை நெருங்கவுள்ளது. இதையடுத்து தற்போது மணிகண்டன் இயக்கத்தில் ஒரு வெப் தொடரிலும் ஆறுமுககுமார் இயக்கத்தில் ஒரு படமும் நடித்து வருகிறார். மேலும் பல்வேறு படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. 

 

இந்த நிலையில், விஜய் சேதுபதி பேசிய பழைய வீடியோ ஒன்று தற்போது பலராலும் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. எஸ்.பி. ஜனநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்த லாபம் படம் தெலுங்கில் வெளியான நிலையில், தெலுங்கு ஊடகம் ஒன்றிற்கு பேட்டி அளித்த விஜய் சேதுபதி, க்ரித்தி ஷெட்டியுடன் டூயட் பாடி நடிக்க முடியாது எனக் கூறியுள்ளார். அவர் கூறியதாவது, "இயக்குநர் பொன்ராம் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஒரு படம் நடிக்கிறேன். அதற்கு கதாநாயகியாக க்ரித்தி ஷெட்டியை நடிக்க வைக்க அவரது புகைப்படத்தை அனுப்பினர். இப்போதுதான் அவருக்கு அப்பாவாக நடித்தேன். அதனால் அவருக்கு ஜோடியாக நடிக்க முடியாது என்றேன். ஆனால் அவர்கள் உப்பெனா படத்தை பார்க்கவில்லை. அதனால் நான் க்ரித்திக்கு அப்பாவாக நடித்தது அவர்களுக்கு தெரியாது. 

 

மேலும் உப்பெனா பட க்ளைமாக்ஸ் காட்சியில், நான் க்ரித்தியிடம், எனக்கு 15 வயதில் ஒரு மகன் இருக்கிறார். நீங்களும் கிட்டத்தட்ட அந்த வயதில் இருப்பவர். அதனால் என்னை நிஜமாகவே உங்களின் தந்தையாக நினைத்துக் கொள்ளுங்கள் என்று கூறினேன். அப்படி சொல்லிவிட்டு எப்படி அவருடன் ரொமான்ட்டிக்காக நடிக்க முடியும். அதனால் எப்போதுமே அது நடக்காது" என்றார்.

 

 

Next Story

பிரபல ஹீரோவின் மகனால் துன்புறுத்தலா? - க்ரித்தி ஷெட்டி விளக்கம்

Published on 07/07/2023 | Edited on 07/07/2023

 

Krithi Shetty reacts about his rumour

 

தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வரும் க்ரித்தி ஷெட்டி ஜெயம் ரவியின் 'ஜீனி' படம் மூலம் தமிழுக்கு அறிமுகமாகிறார். பான் இந்தியா படமாக தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் இப்படம் வெளியாகவுள்ளது. இப்படத்தின் பூஜை அண்மையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு தனது ஆர்வத்தை வெளிப்படுத்தினார் க்ரித்தி ஷெட்டி. 

 

இந்நிலையில், ஒரு பிரபல ஹீரோவின் மகனால் க்ரித்தி ஷெட்டி துன்புறுத்தப்படுவதாகவும், அவர் கலந்துகொள்ளும் ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் அந்த நபர் தொல்லை கொடுப்பதாகவும், எங்கு சென்றாலும் அவரை தன்னிடம் வரச்சொல்லி அவரை கட்டுப்படுத்த முயல்வதாகவும், க்ரித்தி ஷெட்டியுடன் பழக கடுமையாக முயற்சி செய்கிறார் என்றும், ஆனால், க்ரித்தி ஷெட்டிக்கு இது பிடிக்கவில்லை என்று மீடியாக்களிடம் க்ரித்தி ஷெட்டி தெரிவித்ததாகக் குறிப்பிட்டு ஒரு புகைப்படம் சமூக வலைதளங்களில் அண்மையில் பரவி வந்தது.

 

இந்நிலையில், இந்த தகவலை மறுத்த க்ரித்தி ஷெட்டி, "தயவு செய்து கதைகளை உருவாக்குவதையும் தவறான தகவல்களைப் பரப்புவதையும் நிறுத்துங்கள். இது ஒரு அடிப்படை ஆதாரமற்ற வதந்தி என்பதால் இதைப் புறக்கணிக்க நினைத்தேன்" என தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.