Koozhangal movie out of Oscars race

இயக்குநர் விக்னேஷ் சிவன், நடிகை நயன்தாரா இருவரும் இணைந்து ரௌடி பிக்சர்ஸ் நிறுவனத்தின் மூலம் 'கூழாங்கல்' என்ற படத்தை தயாரித்திருந்தனர். அறிமுக இயக்குநர் பி.எஸ். வினோத் ராஜ் இயக்கியுள்ள இப்படத்திற்குயுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருந்தார். முதலில் வேறு நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டுவந்த ‘கூழாங்கல்’ திரைப்படம் பிறகு ரௌடி பிக்சர்ஸ் நிறுவனத்திற்குக் கை மாற்றப்பட்டது. சர்வதேச திரைப்பட விழாவில் பல விருதுகளை வாங்கியுள்ள இப்படம், இந்தியா சார்பாக ஆஸ்கர்விருது போட்டிக்குப் பரிந்துரைக்கப்பட்டது.

Advertisment

ad

Advertisment

இந்நிலையில், ஆஸ்கர் விருது போட்டியிலிருந்து ‘கூழாங்கல்’ திரைப்படம் வெளியேறியுள்ளது. சமீபத்தில் விக்னேஷ் சிவன், ஆஸ்கர் விருது இறுதி பட்டியலில் ‘கூழாங்கல்’ திரைப்படம் இடம்பெறும்என நம்பிக்கை தெரிவித்திருந்த நிலையில், தற்போது இப்படம் ஆஸ்கர் ரேஸிலிருந்து வெளியேறியுள்ளது ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இத்தகவலை இயக்குநரும் 'கூழாங்கல்' படத்தின் தயாரிப்பாளருமான விக்னேஷ் சிவன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.