gauthami

Advertisment

குரு சிஷ்யன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் கௌதமி. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட அனைத்து தென்னிந்திய மொழி திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார்.

இவர் கொட்டிவாக்கம் வெங்கடேஸ்வரா நகரில் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் அதிகாலை இவரது வீட்டு வளாக சுற்றுச்சுவர் ஏறி இளைஞர் ஒருவர் குதித்த சம்பவத்தால் அதிர்ச்சியில் இருக்கிறார் கௌதமி.

Advertisment

இதுகுறித்த புகாரின்பேரில் அங்கு வந்த நீலாங்கரை போலீஸார் இளைஞரைப் பிடித்து காவல் நிலையம் அழைத்து சென்றனர். மதுபோதையில் இருந்த அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், கொட்டிவாக்கம், குப்பத்தைச் சேர்ந்த பெயின்டர் பாண்டியன் (24) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர் மீது 2 பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிந்து கைது செய்து பின்னர், ஜாமீனில் விடுவித்தனர். குடிபோதையில் வீட்டு சுவர் ஏறி குதித்ததாக போலீஸ் விசாரணையில் அந்த வாலிபர் தெரிவித்துள்ளார்.