Skip to main content

பல ஜாம்பவான்கள் இயக்கத்தில் நடித்த பிரபல நடிகர் மரணம்!

Published on 06/02/2020 | Edited on 06/02/2020

சாம்பியன் என்னும் படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதற்காக சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டவர் கிர்க் டக்ளஸ். 1946ஆம் ஆண்டு வெளியான தி ஸ்ட்ரேஞ் லவ் ஆஃப் மார்த்தா இவர்ஸ் படத்தின் மூலம் ஹாலிவுட் சினிமாவில் கால் பதித்தார். இதுவரை 90க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கும் டக்ளஸ் 103 வயதில் மரணமடைந்துள்ளார்.
 

kirik douglas

 

 

உலகம் முழுவதும் உள்ள அவருடைய ரசிகர்கள் அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். ஸ்பார்டகஸ் (1960), லஸ்ட் ஃபார் லைஃப் (1956) ஆகிய படங்கள் இவரது திரையுலக பயணத்தில் பலருக்கும் பிடித்தவைகளாக இருக்கின்றன. டக்ளஸ் அந்த காலத்தில் சிக்ஸ் பேக் மனிதர். அவருடைய உடல் தோற்றத்திற்காக பெரும் ரசிகர் கூட்டம் உண்டு.

சினிமாவின் ஜாம்பவான்களான குப்ரிக், பில்லி வில்டெர் உள்ளிட்டோரின் இயக்கத்தில் நடித்திருக்கிறார். கடந்த 1996ஆம் ஆண்டு வாழ்நாள் சாதனைக்கான ஆஸ்கார் விருது வழங்கப்பட்டது. 

கடந்த சில நாட்களாகவே உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த டக்ளஸ் நேற்று (05.02.2020) கலிபோர்னியாவில் உள்ள தனது வீட்டில் மரணமடைந்தார். கிர்கின் மரணத்திற்கு ஹாலிவுட்டின் பிரபல இயக்குனர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ரிலீஸ் ஆவதற்கு முன்பே, இந்தியப் படத்தை ரீமேக் செய்யும் ஹாலிவுட் பட நிறுவனம்!

Published on 02/07/2024 | Edited on 02/07/2024
A Hollywood film company remakes an Indian film before its release

பாலிவுட் இயக்குநர் மற்றும் தயாரிப்பாளரான கரண் ஜோகர்,  தர்மா ப்ரொடக்‌ஷன்ஸ் மூலம் பல படங்களை தயாரித்து வருகிறார். இவர் தற்போது ‘கில்’ படத்தை தயாரித்துள்ளார். இயக்குநர் நிகில் நாகேஷ் இயக்கத்தில் லக்‌ஷயா, ராகவ் ஜூயல், தன்யா மணிக்தலா ஆகியோர் நடிப்பில் உருவாகும் ‘கில்’ படம் வருகிற ஜூலை 5ஆம் தேதி வெளியாகவுள்ளது. 

இப்படம் திரைக்கு வருவதற்கு முன்பாகவே, ஹாலிவுட்டில் ரீமேக் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரபல ஹாலிவுட் நடிகர் கீனு ரீவ்ஸ் நடிப்பில் உலகம் முழுவதும் ஹிட்டான ‘ஜான் விக்’ சீரிஸை தயாரித்த 87 லெவன் எண்டர்யின்மெண்ட் நிறுவனம், தற்போது ‘கில்’ படத்தை ரீமேக் செய்யவுள்ளதாக கூறப்படுகிறது. 

டொராண்டோ சர்வதேச திரைப்பட விழாவிலும், டிரிபெகா திரைப்பட விழாவிலும், ‘கில்’ படம் திரையிடப்பட்டிருக்கிறது. ஆக்சன் படமாக உருவாகியிருக்கும் இந்தியத் திரைப்படம், திரைக்கு வெளிவருவதற்கு முன்பாக ஹாலிவுட்டில் ரீமேக் செய்யப்படவுள்ளது பெரும் எதிர்பார்ப்பைக் கிளப்பியுள்ளது. 

Next Story

மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட பிரபல நடிகர் 

Published on 27/05/2024 | Edited on 27/05/2024
Johnny Wactor passed away in robbery incident

ஹாலிவுட் திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் கவனம் செலுத்தி வந்தவர் நடிகர் ஜானி வேக்டர். ஜெனரல் ஹாஸ்பிட்டல் என்ற தொடர் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தார். இவர் கடந்த 25ஆம் தேதி அமெரிக்கா லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் அதிகாலை 3.30 மணியளவில் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். அவருக்கு வயது 37.

இது தொடர்பாக ஆங்கில ஊடகங்களில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, மே 25ஆம் தேதி லாஸ் ஏஞ்சல்ஸில் ஜானி வேக்டர், சக ஊழியருடன் இருந்த போது மாஸ்க் அணிந்த மூன்று மர்ம நபர்கள் அவரது காரில் உள்ள ஒரு பொருளை திருட முயல்வதைப் பார்த்துள்ளார். அவர்களை நோக்கி போகும் போது மர்ப நபர்களில் ஒருவர், ஜானி வேக்டரரை சுட்டுள்ளார். உடனடியாக அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர். அப்போது அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர். 

இந்தச் சம்பவம் ஹாலிவுட் திரைத்துறையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக ஜானி வேக்டரின் தாயார், ஒரு ஆங்கில ஊடகத்தில், “என் மகன் திருடர்களோடு சண்டையிடவில்லை. இருப்பினும் அவனைச் சுட்டுக்கொன்று விட்டனர். உடனே மூவரும் தப்பி ஓடிவிட்டனர். அவர்கள் பற்றிய விவரங்கள் மறைக்கப்பட்டு ஒருவர் கூட இன்னும் கைது செய்யப்படவில்லை” எனக் கூறினார்.