Skip to main content

அடுத்த படத்திற்காக பிரபல இந்தி நடிகையை ஒப்பந்தம் செய்த ஷங்கர்!

 

shankar

 

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான ஷங்கர், கடைசியாக இயக்கிவந்த ‘இந்தியன் 2’ திரைப்படம் பல்வேறு காரணங்களால் முடங்கியுள்ளது. இப்படம் மீண்டும் எப்போது தொடங்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்துக்கொண்டிருந்த வேளையில், இயக்குநர் ஷங்கரின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியானது. அதன்படி, பிரபல தெலுங்கு நடிகர் ராம் சரணை வைத்து ஷங்கர் படம் இயக்கவுள்ளார். அப்படத்தை பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்கவுள்ளார். தமன் இசையமைக்கிறார்.

 

இது நடிகர் ராம் சரணின் 15வது படமாகும். இப்படத்தின் ஆரம்பகட்டப் பணிகள் தற்போது முழுவீச்சில் நடைபெற்றுவருகின்றன. இப்படத்தில் ராம் சரணுக்கு ஜோடியாக நடிப்பது யார் என்பது குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகிவந்த நிலையில், ராம்சரணின் 15வது படத்தின் நாயகி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு இன்று (31.07.2021) வெளியிட்டுள்ளது. அதன்படி, இப்படத்தில் ராம்சரணுக்கு ஜோடியாக பிரபல இந்தி நடிகை கியாரா அத்வானி நடிக்கவுள்ளார். நடிகை கியாரா அத்வானி இன்று தனது பிறந்தாளைக் கொண்டாடுவதை முன்னிட்டு இந்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பை செப்டம்பர் மாதத்தில் தொடங்க படக்குழு திட்டமிட்டுள்ளது.