'KGF2' a huge hit in Tamil following hindi

Advertisment

பிரஷாந்த் நீல் இயக்கத்தில் யாஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் 'கே.ஜி.எஃப் 2'. மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இப்படம் ரசிகர்களின் பேராதரவு பெற்று திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. ஹோம்பாலே ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரித்திருந்த இப்படத்தில் சஞ்சய் தத், ரவீனா டாண்டன், பிரகாஷ் ராஜ், ஸ்ரீநிதி ஷெட்டி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் கன்னடத்தில் உருவாக்கப்பட்டு தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் டப் செய்து வெளியானது.

இந்நிலையில் 'கே.ஜி.எஃப் 2' படம் தமிழ்நாட்டில் மட்டும் 100 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. தமிழ்நாட்டில் பிற மொழி படங்கள் 100 கோடி வசூல் செய்த லிஸ்டில் 'கே.ஜி.எஃப் 2' இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது. முதல் இடத்தில் ராஜமௌலி இயக்கத்தில் வெளியான 'பாகுபலி 2' படம் உள்ளது. சமீபத்தில் 'கே.ஜி.எஃப் 2' படம் இந்தியில் மட்டும் 341கோடி ருபாய் வசூல் செய்து இந்தியில் அதிக வசூல் செய்த படங்களின் வரிசையில் மூன்றாம் இடத்தை பிடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.