kgf2 and laal singh chaddha movies releasing on feb14

இயக்குநர் அத்வைத் சந்தன் இயக்கும்'லால் சிங் சத்தா' படத்தில் அமீர்கான் நடித்து முடித்துள்ளார். இதில் அமீர்கானுக்கு ஜோடியாக கரீனா கபூர் நடிக்க, மோனா சிங், நாகா சைதன்யா உள்ளிட்டோர் படத்தின்முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இது 1994ஆம் ஆண்டு ஹாலிவுட்டில் டாம் ஹான்க்ஸ் நடிப்பில் வெளியாகி, உலகம் முழுவதும் பல விருதுகளைக் குவித்த ‘ஃபாரஸ்ட் கம்ப்’ படத்தின் அதிகாரப்பூர்வ தழுவல் ஆகும். இந்தப் படத்தில் குறைந்த அளவிலான ஐக்யூ உள்ளவர் கதாபாத்திரத்தில் அமீர்கான் நடிக்கிறார்.ஏற்கனவே பேட்டி ஒன்றில் இப்படம் ஏப்ரல் மாதம் 14 ஆம் தேதி வெளியாகும் என அமீர்கான் அறிவித்திருந்தார். அதே நாளில் இந்தியளவில்மாபெரும் வெற்றி பெற்ற 'கே.ஜி.எஃப்' படத்தின் இரண்டாம் பாகம் வெளியாவதால் நடிகர் அமீர்கான்கே.ஜி.எஃப் படக்குழுவினரிடம்மன்னிப்பு கேட்டிருந்தார்.

Advertisment

இருப்பினும் படத்தின் ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகாமல் இருந்த நிலையில் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி,'கே.ஜி.எஃப் சேப்டர் 2' திரைப்படம் வெளியாகும் அதேஏப்ரல் மாதம் 14 ஆம் தேதி 'லால் சிங் சத்தா' திரைப்படமும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

இதனிடையே இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் 'பீஸ்ட்' திரைப்படமும்ஏப்ரல் மாதம் வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. கிட்டத்தட்ட இப்படமும் ஏப்ரல் மாதம் 14 ஆம் தேதி வெளியாகும் என சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஒரே நாளில் மூன்று பெரிய நடிகர்களின் திரைப்படங்கள் வெளியாக உள்ளதால் சினிமா ரசிகர்கள் பெரும் உற்சாகத்தில் உள்ளனர்.